உடல் வலி நீங்க முடக்கத்தான் இலை?

By News Room

உடல் வலி நீங்க முடக்கத்தான் இலை?

தேவையான பொருட்கள்
மிளகு 
எள்ளு 
உளுந்து 
வேப்பம்பூ 
நாய்க்கடுகு 
சுண்டை வற்றல்

   இவை அனைத்தையும் வகைக்கு நூறு கிராம் வீதம் எடுத்து இதை லேசாக வறுத்து பின்பு  இடித்து சலித்து ஒன்றாக சேர்த்து  கொண்டு 

   இதனோடு இந்துப்பு அறுபது கிராம் எடுத்து கருகாமல் வறுத்து இதை பொடி செய்து 

  இந்த இந்துப்பு பொடியையும் முன்செய்த மூலிகை பொடியுடன் கலந்து இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து இதை ஒரு கைப்பிடி அன்னத்துடன் கலந்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வர உடல் சார்ந்த வலிகள் அனைத்தும் நீங்கும் வாத நோய்கள்  உடலில் வராத வண்ணம் தடுத்து நிறுத்தும்

  உடல் இயக்கத்திற்கு பாதிப்பைத் தரும் சீதளத்தை கண்டித்து சுவாச பிணிகளை நீக்கி உடல் ஆரோக்கியமாக இயங்க இது ஒரு அரு மருந்தாக செயல்படும்

நாள்பட்ட உடல் வலி நீங்க

  ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை பறித்து இதனோடு பத்து மிளகும் மூன்று பூண்டிதழும் சேர்த்து 

   இதை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் பானையில் போட்டு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி  பாதியாக சுண்டக்காய்ச்சி இந்த கசாயத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர  

  குடலில் தேங்கியுள்ள மலம் முழுவதுமாக வெளியேறும் இதன்மூலம் உடலில் நீண்ட நாட்களாக வலிகளை ஏற்படுத்தி வந்த வாதநீர் முழுவதும் வெளியேறி விடும் இதனால் உடல் வலி முழுமையாக நீங்கும்

   உடலை சீர்குலைக்கும் கெட்ட நீரான வாதநீர் முழுமையாக வெளியேறி விடுவதால் உடல் உறுப்புகளின் தளர்வு நீங்கி உள் உறுப்புகளுக்கு வலிமை உண்டாகும்

    இந்த கஷாயத்துடன்  குப்பைமேனி பொடியை  இரண்டு கிராம் அளவிற்கு கலந்து இதை சாப்பிட்டு வர உடல் நோய்கள் முழுவதும் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் நீடிக்கும்

  இந்த மருத்துவ முறையை கையாளும் பொழுது அதிகமாக பேதி ஏற்பட்டால் மோர்சாதம் சாப்பிட பேதி நிற்கும் இந்த வைத்திய முறையை கடைபிடிக்கும் நாட்களில் மிளகு ரசம் வைத்து ஒரு நேரம் சாப்பிட உடலுக்கு அதிக நன்மை உண்டாகும்.

.
மேலும்