மூட்டு வலி தீர முடக்கத்தான் கம்பு தோசை

By News Room

தேவையான பொருட்கள்:

கம்பு – ஒரு கிலோ

வெந்தயம் – 50 கிராம்

கொத்துமல்லித் தழை – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

சிறிய வெங்காயம் – 150 கிராம்

பச்சை மிளகாய் – 5

முடக்கத்தான் கீரை – ஒரு பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கம்புடன் வெந்தயம் கலந்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 முடக்கத்தான் கீரை, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்கவும். 

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு கலந்து தோசையாக வார்க்கவும்.

வாதநோய், மூட்டுநோய், கண்நோய் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த நிவாரணி.

.
மேலும்