5 நிமிட மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

By Senthil

ஒரு 5 நிமிடத்தில் சுவையான மாங்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க பார்ப்போம்...  இதற்கு புளிப்பில்லாத மாங்காய் இருந்தால் நன்றாக இருக்கும். இரண்டு மாங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்புப் போட்டு பிசறி வைத்துக் கொள்ள வேண்டும். 
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்த பின், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து, மிளகாய்த் தூள் நான்கு டீஸ்பூன் போட்டுப் பொரிய விட்டு பொருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் போட்டு நறுக்கிய மாங்காயைப் போட்டு ஒரு புரட்டு புரட்டவும் தண்ணீர் படாமல் இருந்தால் பத்து நாட்கள் வரை தாங்கும் ஊறுகாய் இது. கோடை விடுமுறைக்கு டூர் செல்பவர்கள், 
இது மாதிரி போட்டு எடுத்துச்செல்லலாம். இப்போது உடனடி சுவையான மங்காய் ஊறுகாய் ரெடி

.
மேலும்