சூப்பர் மசாலா பொரி செய்வது எப்படி?

By Senthil

சுவையான மசாலா பொரியை வீடுகளில் செய்வது எப்படி என்பதை இப்போ பார்ப்போம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் அளவு பொரியை போட்டு கொள்ளுங்கள். இதில் வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்,  பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1,  கேரட் துருவல் 1/2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை போதும். 

இதனுடன் மேலும், 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மசாலா பொரி செய்தால் இதன் சுவை மேலும் அதிகரிக்கும். அனைத்து பொருட்களை எல்லாம் ஒரு கரண்டியை கொண்டு நன்றாக கலந்து விட்டு, இறுதியாக எலுமிச்சை பழச்சாறை மேலே பிழிந்து, ஒருவாட்டி கலந்துவிட்டு உடனடியாக பரிமாறி விடுங்கள்.  இப்போது சுவையான பொரி ரெடி

.
மேலும்