மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி?

By nandha

தேவை: மருதாணி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, பூ, வெந்தயம்,, மிளகு, காய்ந்த நெல்லி, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

செய்முறை: ஓர் அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் இருக்கும்போது வெந்தயம், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, காய்ந்த நெல்லி, மிளகு, செம்பருத்தி இலை, பூ போன்றவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின்பு ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும்.

பயன்பாட்டு முறை:  வாரத்துக்கு 2 நாள் தலையில் இந்த எண்ணெயை தேய்த்து முடியை சுத்தம் செய்யலாம். இதனால் முடிகொட்டுதல், நரைமுடி, நுனிமுடி பிளவு, முடியின் வறட்சி தன்மை, சளி பிடித்தல் போன்ற பிர்ச்னைகளை போக்கும்.

.
மேலும்