உடல் ஆரோக்கியத்தை காப்பது எப்படி?

By Senthil

தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நேர்மறையான எண்ணத்துடன் எழுந்திருங்கள்.

மேலும், உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம். சத்தான காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாஸ்ட் புட்' எனப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை. உடல் எடையை சீராக வைத்திருங்கள், அதிக எடையும் இல்லாமல், குறைந்த எடையும் இல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம்.

வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம். உடற்பயிற்சி செய்வது பாதி நோய்களிலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிக்கும். எனவே தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

.
மேலும்