வீட்டிலேயே கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?

By Senthil

கொடைவிடுமுறையில்  உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண கோதுமை பிஸ்கட் சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும்.  இதனை எவ்வாறு நமது வீடுகளில் செய்யலாம் வாங்க பார்ப்போம்...

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 400 கிராம் (2 பங்கு)
சீனி – 150 கிராம் (¾ பங்கு)
வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கோதுமை பிஸ்கட் செய்முறை
சீனியை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அடித்த சீனி, வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.மூன்றினையும் ஒரு சேர நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும். எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சுமார் ½ இன்ஞ் தடிமன் உள்ள சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் சப்பாத்தியை தேவையான அளவு மற்றும் வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

இவ்வாறு எல்லா மாவினையும் விரும்பும் வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.கடாயில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் துண்டுகளாக்கிய மாவினைப் போட்டு பொரித்துக் கொள்ளவும். அதனை ஒரு தட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

.
மேலும்