தொப்பையை குறைக்கும் ராகி எனும் கேழ்வரகு! 

By Tejas

ராகியை கோடை காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது. இது நம் உடலின் வெப்பத்தைத் போக்கும். ராகியானது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

தினமும் காலையில் ராகி உருண்டையை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அமினோ ஆசிட்டான  ட்ரிப்டோஃபன் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

ராகியில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெற்று உறுதியாக இருக்கும்.
 
ராகி உருண்டை நீரிழிவு நோய் அதிகரிப்பதை தடுப்பதுடன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
 
ராகியில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் எனும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அமினோ ஆசிட்  நம் உடலில் கல்லீரலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.

ராகியில் இரும்புச்சத்து இருப்பதால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கவும், இரத்த சோகை வருவதை தடுக்கவும் உதவும்.

ராகி (கேஷ்வரகு) உட்கொண்டால் மன அழுத்தத்தை தடுக்கவும், உடலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்கவும் ராகி உருண்டையை தினமும் உட்கொள்ள வேண்டும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உள்ளவர்கள் ராகி உருண்டையை உட்கொள்ளலாம்.  

தாய்மார்களின் உடலில் சிவப்பணுக்களின் அளவை அதிரிக்கவும், பால் சுரப்பை அதிகரிக்கவும், ராகி உருண்டையை சாப்பிடலாம்.

.
மேலும்