அடடே இவ்வளவு ந்ன்மையா கொய்யா பழத்தில்?

By News Room

அடடே இவ்வளவு ந்ன்மையா கொய்யா பழத்தில்?

மற்ற பழ வகைகளை விட விலை மலிவாகக் கிடைக்கும் பழமாகக் கொய்யா பழம் இருக்கிறது. இதனாலோ என்னவோ இதனைப் பலரும் அலட்சியமாக்கி விடுகின்றனர். ஆனால் மற்ற பழ வகைகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்த பழமாகக் கொய்யா இருக்கிறது. இது தவிரக் கொய்யா பழம் வழங்கும் மற்ற பயன்களை இங்குப் பாருங்கள்.. 
 

 
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கொய்யாப் பழம் அதிகரிக்கிறது. சிலருக்குத் தொடர்ச்சியாகத் தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாகத் தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தைச் சுத்திகரித்துத் தலைவலிக்கான மூலகாரணத்தைச் சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறையச் சாப்பிடலாம். 
 
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாகச் சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரணக் கோளாறு, பேதி போன்றவற்றைக் குணப்படுத்தும். 
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதயச் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. 
 
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக்கூடாது. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. 
 
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். 
 
கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றைக் கொய்யா சீராக்குகிறது.

.
மேலும்