அவல் கல்கண்டு பொங்கல் செய்யலாம் வாங்க?

By Senthil

பொதுவாக நமது முன்னோர்கள் வீடுகளில் அவலை அதிகம் பயன்படுத்துவர். தற்போது மாறிவரும் உணவு முறையானது இளையதலைமுறையினர் பீசா, பர்கர் என பாஸ்ஃபுட் உணவுக்கு பழகிவிட்டனர். இதனால், பல்வேறு நோய்கள் நம்மை தாக்குகிறது. 

ஆகவே, இனி வரும் காலங்களிலாவது இயற்கை உணவுக்கு மாறுவோம் வாங்க... அவற்றில் அவல், இதனைக் கொண்டு அவல் கல்கண்டு பொங்கல் செய்யலாம் வாங்க....

தேவையானவை:  அவல் - 2 கப், கல்கண்டு - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை:  அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

.
மேலும்