The Young Karl Marx மூவி விமர்சனம்

By News Room

Raoul Peck- இயக்கிய ஜெர்மன் படம். இவர் ஒரு political activist. 
கார்ல் மார்க்ஸின் இளமைப் பருவத்தையும், ஏங்கெல்ஸைப் பற்றிய அறியாத பல விஷயங்களையும் இந்த படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்
1843-ஆம் ஆண்டு மார்க்ஸின் புரட்சிகர எழுத்துகளுக்காக அவர் கைதுசெய்யப்படுகிறார். பின் மனைவி, குழந்தையோடு (இளம் வயதிலேயே ஜென்னியை காதல் மணம் புரிகிறார்) பாரீஸ் நகருக்குச் செல்கிறார். அங்கே அவர் ஏங்கெல்ஸை சந்திக்கிறார்.
ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில் அவரது தந்தை நடத்தி வரும் ஏங்கெல்ஸ் ஸ்பின்னிங் மில்-லில் நடக்கும் தொழிலாளர் போராட்டத்தின் போது நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மரியா என்ற பெண் தொழிலாளியை காதல் மணம் புரிகிறார். 
ஒரு சமயம் மார்க்ஸூம் ஏங்கெல்ஸும் இரவு முழுவதும் மது அருந்திக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்கின்றனர். காலையில் இருவரும் மார்க்ஸின் இல்லத்தில் இருக்கும்போது, ஜென்னி கூறுகிறார். மார்க்ஸ் எப்போதுமே அதிகமாக குடித்தால் இரண்டு நாளைக்கு ஹேங்-ஓவரில் துன்பப்படுகிறார். ஆனால் நீங்கள் காலையிலேயே ஃப்ரெஷ்ஷாக இருக்கிறீர்களே என்று கூறுகிறார். இது போன்ற சின்ன சின்ன சுவையான சம்பங்கள் படத்தில் ஏராளமாக இருக்கின்றன.
மார்க்ஸ் எப்போதுமே ஒரு கையில் சுருட்டோரும், ஒரு கையில் மதுவோடும் இருப்பதாகவே படத்தில் காட்சிகள் வருகின்றன. ஆனால் மார்க்ஸ் அரசியல் எழுத்துக்களில் துடிப்பாகவும், பேச்சில் மிக சுவாரசியமாகவும் இருக்கிறார்.
 மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் லண்டனில் நடக்கும் தொழிலாளர் லீக்-கில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது, பிறகு ஓட்டெடுப்பு நடந்து இவர்கள் பேச அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பேசிய பேச்சும், அங்கே அவர்கள் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் ஆரம்பிக்கும் கம்யூனிஸ்ட் அகிலமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்படி ஆரம்ப கால நிகழ்வுள் மட்டுமே இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி ராஜேந்திரன்

.
மேலும்