IFFK - 2016 being 17 மூவி விமர்சனம்

By News Room


 பிரெஞ்ச் திரைப்படம்
இயக்கம்:  Andre Techine

 ஒரு சாதாரணப் படம் ஆனால் களமோ சீரியஸானது. நமது குழந்தைகளைப் பற்றியதுதான். 17 வயதில் அவர்கள் படும் அவஸ்தைகள், சந்திக்கும் பிரச்சினைகள், கனவுகள். பிரெஞ்ச் தேசத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சுதந்திரம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்று கூட வைத்துக்கொள்ளலாம், ஆனால் பெற்றோர்களின் கவனிப்பும் இருக்கிறது. அது எங்கே கொண்டு செல்கிறது  குழந்தைகளை....

ஓரினச் சேர்க்கை வரை கொண்டு செல்கிறது. ஆனால், அதை அறிந்தும் கூட பெற்றோர்கள் பெரிதாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  களவும் கற்று மற என்று நம் பெரியோர்கள் சொல்வது போல... குழந்தைகள் தங்கள் பதின் பருவத்தில் எல்லாம் அறிந்து தெளிவடைவதாகவே படத்தில் காண்பிக்கப்படுகிறது... 

பல திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற படம்.

.
மேலும்