சினிமா நடிகர் பாண்டு யார்?

By News Room

இவர் சினிமா நடிகர் மட்டுமல்ல. இவர் ஒரு ஓவியரும் கூட.

இவர் ஓவிய துறையில் phd பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் ஓவிய துறையில் phd பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.

1970ஆம் ஆண்டு 'மாணவன்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாண்டு. 
500 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டில் வெளியான 'இந்த நிலை மாறும் ' என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் ஓவிய கலைஞராகவும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ் என்பவரும் நடிகர் என்பதும் குறிப்பிடதக்கது.

சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தையே வலம் வந்து கொண்டிருப்பவர். 

நான் ஓவியம் தொடர்பான டாக்டரேட்டை ஃபிரான்ஸில் முடிச்சிட்டு கேப்பிடல் லெட்டர்ஸ் அப்படிங்கிற கம்பெனியை சென்னையில் ஆரம்பிச்சு பிசியா இருந்தேன். குமுதா கதைகளைப் படிச்சிட்டு அதுக்கேத்தபடி படங்கள் வரையுற இல்லஸ்ட்ரேஷன் ஆர்ட்டிஸ்ட். ரொம்ப வேகமா வரைவாங்க. ஓவியங்கள்ல கண்கள் வரையறப்போ, எல்லாரும் பிளாக் கலர்ல வொயிட் கலரை டச் பண்ணுவாங்க. ஆனா, இவங்க டச் பண்ணாமலே அந்த ஏரியாவை அப்படியே வொயிட்ல விடுவாங்க. அது ரொம்ப அபூர்வமான திறமை. அதை நான் இவங்ககிட்ட பார்த்தேன். ராமர் பட்டாபிஷேகம் இவங்களோட தஞ்சாவூர் பெயின்டிங்ல அத்தனை தெய்வீகமா இருக்கும்’’ என்று மனைவியை பற்றி பெறுமிதமாக கூறுவார். 

நான் ஒரு கம்பெனி சக்ஸஸ் ஆகுற அளவுக்கு பேர் வைப்பேன். எதிர் சக்திகள் அந்த கம்பெனியைப் பாதிக்காத மாதிரி லோகோ, எம்ப்ளம் உருவாக்குவேன். பல கம்பெனிகளுக்கு, காலேஜ்களுக்கு நான் டிசைன் பண்ணிக்கொடுத்திருக்கேன். அ.தி.மு.க கொடியும் நான் டிசைன் செஞ்சதுதான். பிரம்ம முகூர்த்த நேரத்துலதான் ஓவியங்கள் வரைவேன். நான் பிசினஸ்ல ஓஹோன்னு இருக்கிறப்போதான் சினிமா வாய்ப்பு வந்துச்சு. சினிமா ஷூட்டிங் போயிட்டா பிசினஸ் பத்தி சிந்திக்க மாட்டேன். பிசினஸ் நேரத்துல சினிமா பத்தி யோசிக்க மாட்டேன்’’. என்று கூறும்
பாண்டு இன்று இல்லை என்பதை
நினைக்கும் போது மனதுக்கு கொஞ்சம்
கஷ்டமாக இருக்கிறது.
 
தொகுக்கப்பட்ட பதிவு
நன்றி : விகடன்.. தினமணி. . 
பெண்மை. காம்..

.
மேலும்