மோடி முதல் டோனி பிளேயர் வரை.. அம்பானி வீட்டு திருமணத்திற்கு வரும் அரசியல் பெரும் தலைகள்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் என்பதை தாண்டி ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போனவர்கள்.
இப்படியிருக்கும் போது இவர்களின் கடைக்குட்டி சிங்கம், அன்பு செல்லம் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். திருமணத்திற்கு முன்பே 2 நிச்சயதார்த்தம், 2 கொண்டாட்டங்கள், ஏழை தம்பியினருக்கு திருமணம் என எக்கச்சக்க கொண்டாட்டம் தாண்டி, மெஹந்தி, காப்ரா, மாமன் சீர் என கடந்த 6 மாதமாக அன்பானி வீட்டில் கொட்டு சத்தம் கேட்ட வண்ணமாகவே உள்ளது.
பூராவுமே தங்கத்தில் செஞ்சது.. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சென்ட் மற்றும் ஷைலா மெர்ச்சென்ட்டின் மகளும், தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சென்ட்-ன் திருமணம் இன்று துவங்கி 3 நாட்கள் மும்பையில் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் நடைபெறுகிறது.
ஜியோ வேர்ல்டு டிரெட் சென்டரில் ஜூலை 12 முதல் ஜூலை 15 வரையில் பல தீம்களில், இந்து முறைப்படி இந்த திருமணம் நடக்கும் காரணத்தால் மொத்த மும்பையும் களைக்கட்டியுள்ளது. இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஆளும் கட்சியினர் முதல் எதிர்கட்சியினர் என பல அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். அப்படி அம்பானி வீட்டு திருமணத்திற்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள் லிஸ்ட் இதுதான்...
முதலும் முக்கியமான பிரதமர் நரேந்திர மோடி அம்பானி வீட்டு திருமணத்திற்கு வருவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது, இதேபோல் ராகுல் காந்தி குடும்பத்திற்கு முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்தும் இத்திருமணத்திற்கு வரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இவர்களை தவிர ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா லோகேஷ், ஆந்திர பிரதேச அமைச்சர் பவன் கல்யாண், ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் கே.டி.ராமராவ், எதிர்க்கட்சித் தலைவர், தெலுங்கானா சிவராஜ் சிங் சவுகான், விவசாய அமைச்சர் அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ்-CWC உறுப்பினர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ்-CWC உறுப்பினர் திக்விஜய சிங், காங்கிரஸ்-CWC உறுப்பினர் கபில் சிபல், ராஜ்யசபா உறுப்பினர் சச்சின் பைலட், காங்கிரஸ்-CWC உறுப்பினர் .
சர்வதேச அரசியல் தலைவர்கள்: ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல் தலைவர் டோனி பிளேயர், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மாட்டியோ ரென்சி, இத்தாலியின் முன்னாள் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ், ஆஸ்திரியாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், கனடாவின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் முகமது நஷீத், மாலத்தீவு முன்னாள் அதிபர் H. E. சாமியா சுலுஹு ஹசன், தான்சானியா ஜனாதிபதி இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்டார் விருந்தினர்களின் வசதிக்காக அம்பானி குடும்பம் விமானப் போக்குவரத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. அம்பானி குடும்பம் மூன்று ஃபால்கன் 2000 ரக தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் சிஇஓ ராஜன் மேரா தெரிவித்தார். இது தவிர இந்த திருமண நிகழ்ச்சியின் போது 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.