ஒரு நாள், புதிதாகத் திருமணமான ஒரு இளைஞன் தன் மனைவியைக் கோவமாக திட்டி கத்திக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தை அவனை அழைத்து, "நாம் போடும் கூச்சல் மற்றவர்களை பயமுறுத்தும். ஆனால் உன் மனைவியை அல்ல." என்றார்.
ஆம் அவர் சொன்னது சரி தான். உங்கள் அச்சுறுத்தல்கள் அவளை பலப்படுத்துகின்றன. ஒரு பெண் அச்சுறுத்தப்பட்டால், அவள் அடக்கப்படுகிறாள் என்று பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள். ஆனால் பெண்கள் அச்சுறுத்தப்படும்போது வலிமையாக மாறுகிறார்கள்.
ஒரு ஆண் தன்னை அச்சுறுத்தி கத்தும்போது ஒரு பெண் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவள் உள்ளுக்குள் அமைதியாக இல்லை. அவள் ஆணின் பலவீனத்தை மதிப்பிடுகிறாள், அவனை எப்படி அடக்குவது என்று மதிப்பிடுகிறாள்.
ஒரு பெண்ணின் இதயத்திற்குள் நுழையும் வழி, அவளை அச்சுறுத்தி அடிபணியச் செய்ய முயற்சிப்பதல்ல என்பது ஆண்களுக்குத் தெளிவாக புரிய வேண்டும்.
காதலும் அன்பும் மட்டுமே பெண்களை பலவீனமாக்குகிறது. நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து அதைக் வெளிக்காட்டினால், அவள் உங்களுக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல் அன்புடன் இருப்பாள்.
ஆனால், ஒரு பெண் தான் உங்கள் பொம்மை போல் இருப்பதை உணர்ந்தால், நீங்கள் அவளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் அல்லது நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் அல்லது கட்டுப்படுத்துகிறீர்கள், என்றால் தன்மானம் அவளை ஆக்கிரமிக்கிறது.
அவள் உடல் ரீதியாக உங்களுக்கு எதிராக நிற்காமல் இருக்கலாம், ஆனால் அவள் மன ரீதியாக உங்களுக்கு எதிராக போய்விடுவாள்.
ஒரு நாள், நீங்களே அவளும் அவள் குழந்தைகளும் உங்களை அவர்களின் சொற்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதைப் பார்ப்பீர்கள் அல்லது அதை தாங்க முடியாமல் விரைவாக இறந்துவிடுவீர்கள்.
பல வருடங்களுக்கு முன் கணவன் அடித்துக் கொண்டிருந்த அந்த பெண்கள் இன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். தாய்மார்களுக்கு குழந்தைகளின் அனுதாபம் இருக்கிறது, ஆண்கள் கடைசியில் தனிமையில் தவிக்கிறார்கள்.
ஆண்களுக்கு எதிராக எப்படி வாழ்வது என்பது பெண்களுக்குத் தெரியும். ஆண்களில் உள்ள 'சிங்கம்' பெண்களை பயமுறுத்துவதில்லை அல்லது அவர்களை உங்களுக்கு அடிபணியச் செய்யாது.
ஒரு பெண்ணை வெல்வது காதல் மட்டுமே, கட்டாயப்படுத்துவதோ அல்லது அச்சுறுத்துவதோ அல்ல. சக ஆண்களை அடக்கலாம், ஆனால் உங்கள் மனைவியை அல்ல. பெண்களுக்கு இயற்கையாகவே வலிகளைத் தாங்குவது எப்படி என்று தெரியும்.
அவர்களுக்கு தைரியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் முட்டாள். ஆண்களிடம் இல்லாத தைரியம் அவர்களிடம் உள்ளது.
அச்சுறுத்தல்களை விட அன்பைக் காட்டவும், உங்கள் மனைவியை நேசிக்கவும்!
உங்கள் மனைவியை நேசிப்பதற்கான இந்த சூத்திரம் அவளை வெல்ல உதவும். ஒரு பெண் நேசிக்கப்படும்போது, அவளுடைய அனைத்து தைரியத்தையும் உடைத்து, அவள் உங்களை கைகளில் தாங்குகிறாள். ஒரு பெண் தன்னை நேர்மையாக காதலிக்கும் ஒரு ஆணுடன் வாழ, எதையும் செய்ய முடியும்.
உங்கள் மனைவியிடம் மென்மையாகப் பேசுங்கள், அவளிடம் கத்தாதீர்கள். கூச்சலிட்டு ஆணாக உங்கள் பலவீனத்தை ஆணவத்துடன் காட்டாதீர்கள்.
கூச்சலிட்ட ஆண்கள் எல்லாம், வாழ்க்கையின் இறுதியில் பேச ஆளில்லாமல் கூடத்தின் மூலையில் கிடத்தப்பட்டு இறுதியில் இறந்து போனவர்களே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்!!