Breaking News :

Thursday, April 25
.

60ம் கல்யாணம் ஏன் எதற்கு எப்படி?


வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர்.

சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும்.

சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர்.

இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்க்கு 60-ம் கல்யாணம் நடத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன், அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.

ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கசஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும்.நீங்க முதல்ல உங்க அப்பாவின் நட்சத்திரபடி என்னைக்கு பிறந்த நாள் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அன்னைக்குதான் நடத்தணும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு.ள். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

அவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும். அதற்குப் பிறகு அவன் உலகபந்தங்களை விட்டுவிட முயல வேண்டும். இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள். எழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான். என்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும்பாதுகாக்கும் காவலர்களானதெய்வங்கள்அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதிபெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள். தொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது. நூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம். அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன. இது உன்னதமான நிலை. இதை அடக்குவது சிரமம். இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் "நீ நூறு வயது வாழவேண்டும்"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.

முக்கியமாக 60 ஆம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.அன்று கல்யாணத்திற்கு வந்தவர்கள் கல்யாணம் முடிந்ததும், மணமக்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது முறை. அவர்களுக்கு சின்ன கிப்ட்(குங்குமச்சிமிழ், ஜாக்கெட் துணி) வாங்கி பழம், தாம்பூலம் வைத்து கொடுக்கலாம்.பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்.

நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.