Breaking News :

Wednesday, April 24
.

கர்மத்தின் விளைவு எப்படி இருக்கும்?


நிறைய பேரின் மனம் பாதிக்க காரணமாக இருந்தவர்கள்-இன்று மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர்...

தன்னுடைய செயல்களால் பிறரின் மனதை துன்புறுத்தியவர்கள்- காரணமில்லாமல் எதையோ நினைத்து துன்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்...துன்பம் நிழல்போல தொடர்ந்து கொண்டே இருக்கும்..

கோவிலில் திருடியவன்- கோவிலின் வாசலில் வியாதியால் பிச்சை எடுப்பான்..

நல்ல மனைவிக்கு துரோகம் செய்தவன்,
தீய மனைவியின் நடத்தையால் ஒவ்வொரு நாளும் வேதனைப்படுவான்..

பாவத்தை அதிகம் பார்த்தவன், கண்ணிழந்து காணப்படுவான்...

பிறரை பிரச்சினைக்கு ஆளாக்குபவன் -பிரச்சினைகளை அதிகம் சந்திப்பான் வழக்குகளுக்கு ஆளாவான்...

ஆயுதங்களால் அங்கத்தை துண்டித்தவன்-அங்கமில்லாமல் பிறந்து வேதனைப்படுவான்...

ஏமாற்றுபவன்-எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வருவான்..

ஹிம்சை செய்தவன்-நோயினால் உடலில் ஹிம்சையை அனுபவிப்பான்..

தாய்..தந்தையை கவனிக்காதவன் -அனாதை ஆஷ்ரமத்தில் வளருவான்....
இப்படி கர்மத்தின் விதி நிறைய இருக்கின்றது, பாவத்தின் பலன் தெரியாதவரை மனிதன் அதை செய்துகொண்டே தான் இருப்பான்.. ஒவ்வொரு கர்மத்திலும் கவனம் கொடுத்தால் நாமும் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட மாட்டோம்.இறைவனை சரணடைந்து அவரை பின்பற்றுவதே பாவத்திற்கான பிராயசித்தம்.

இருக்கின்ற வரை நல்லவராக உண்மையாக அடுத்ததர்கள் மனம் புண்படாமல் நேர்மையாக இருந்தால் நிச்சயம் நற்கதி உண்டுநல்லதே நடக்கட்டும்
வாழ்க்கை ஒரு தற்செயலானது. பிறப்பு தற்செயலானது. திருமணம் தற்செயலானது. குழந்தைகள் தற்செயலானது. வேலை தற்செயலானது. வாழ்க்கை ஒரு உள்ளார்ந்த வளர்ச்சியோ, திசைவழியோ இல்லாது உள்ளது. இதனால்தான் வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியைப் போல உணரமுடியாது போனதற்கு காரணமாக உள்ளது


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.