இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான். இது ஆயிரம் வருடங்கள் நடைபெற்றது.
நிமி ஆயிரம் வருடங்கள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தைச் செய்ய விரும்பினான். அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டுமென்று கேட்டான்.
ஐந்நூறு வருடங்கள் நடைபெறும் ஒரு யாகத்தை இந்திரன்,தெய்யப்போவதாகவும். அதற்குத் தலைவனாகத் தான் இருக்க வேண்டியிருப்பதால் அதுமுடிந்த பின்னர் நிமியின் யாகத்தை நடத்தலாம் என்றும் வசிட்டன் கூறினான்.
அதைக் கேட்டுக் கொண்டு பதில் ஒன்றும் சொல்லாமல் வந்த நிமி, ஐந்நூறு வருடங்கள் காத்திருக்க விரும்பாமல் தன் யாகத்தைத் தொடங்க விரும்பினான்.
கெளதம முனிவரைத் தலைவராக வைத்துக்கொண்டு மற்ற முனிவர்களையும் வைத்துக் கொண்டு நிமி யாகத்தை நடத்தி னான்.
இந்திரனுடைய யாகத்தை முடித்துக்கொண்டு நிமியின் யாகத்தைத் தொடங்கலாம் என்று வசிட்டன் நிமியிடம் வந்தான்.
வசிட்டன் சாபம் :
கெளதமனைத் தலைவனாகக் கொண்டு நிமியின் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தன்னைக் கேட்டு தான் சொல்லியபடி நடவாததால் நிமி தன்னை அவமானப்படுத்தி விட்டான் என்ற கோபத்தினால், வசிட்டன் நிமியின் பூதவுடல் இல்லாமல் போகட்டும் என்று சபித்தான்.
நிமியும் வசிட்டன் கோபம் நியாயமற்றது என்று நினைத்து வசிட்டனுடைய பூதவுடல் இல்லாமல் போதட்டும் ஒன்று சபித்தான்.
இரண்டு பேரின் பூதவுடல்களும் இல்லாமல் போயின.
ஆனால் வருணன் முதலிய தேவர்கள் தயவால் வசிட்டனுக்கு உடனே வேறொரு உடல் கிடைத்தது.
நிமியின் உடலைத் தைலத்தில் போட்டு வைத்திருந்தார்கள். அவனுடைய யாகம் முடிந்தவுடன் முனிவர்கள் அவன் உடம்பில் மறுபடியும் அவன் உயிரைச் செலுத்த விரும்பினார்கள்.
நிமியின் வேண்டுகோள் :
ஆனால், அது தேவையில்லை என்று கூறிவிட்ட நிமி அதற்குப் பதிலாக ஒவ்வொருவருடைய கண் இமையிலும் தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
அவ்வாறே முனிவர்கள் தந்தார்கள். கண் புருவம் அடிக்கடி கண்ணை மூடுவதால் நிமியின் செயல் அதுவாதலால், நிமிஷம் என்ற சொல்லும் பிறந்தது.
ஜனகன் வைதேகன்:
நிமிக்குப் பிள்ளைகள் இல்லாததால் ராஜ்ஜியத்தை ஆள ஒருவரும் இல்லை. இதை அறிந்த முனிவர்கள் நிமியின் உடலைப் பொடி செய்தார்கள். அந்தப் பொடியிலிருந்து தோன்றிய பிள்ளைக்கு ஜனகன் என்று பெயர் வந்தது.
அவன் தந்தைக்கு உடம்பு இல்லாததால் ஜனகனுக்கு வைதேகன் என்ற பெயரும் வந்தது.
சீதை:
ஜனகன் யாகம் செய்வதற் காகப் பூமியை உழுதான். உழுபடைச்சாலில் இருந்து ஒரு பெண் மகவு வெளி வந்தது.
அப்பெண்ணே சீதையாவாள்.
-இலக்கு பழனியப்பன்
பி அழகாபுரி