Breaking News :

Wednesday, November 06
.

திருநங்கைகளிடம் சில்லறை வாங்குவது ஏன்?


திருநங்கைகள் சனி புதன் காரகத்துவத்தில் வருவார்கள் அவர்களை இழிவுபடுத்தி பேச கூடாது அவர்களின் பிறவி அப்படி அமைந்ததற்கு அவர்களின் கர்மா காரணமாகும். அவர்கள் சிவசக்தி சொரூபம் என்பதை உணருங்கள்.எப்பொழுதும் எந்த உயிரையும் இழிவாக பேசும் முன்பு அவர்கள் இடத்தில் உங்களை வைத்து சிந்தித்து பாருங்கள்

.உங்களால் யாரையும் இழிவாக பேசவே தோன்றாது.பொதுவாகவே அவர்களை இந்த சமூகத்தில் ஒதுக்குவதால்தான் நிறைய விஷயங்களை நாம் இழக்கின்றோம். அவர்களுக்கும் நம்மை போன்றே எல்லாவிதமான ஆசைகள் பாசம் உணர்ச்சிகள் ஏக்கம் உண்டு. அவர்களும் கிட்டதட்ட மாற்றுதிறனாளிகள் போன்றவர்கள்தான

உண்மையை சொல்ல போனால் அரசு அவர்களுக்கு ஏதேனும் அங்கீகாரம் கொடுத்தாலோ அல்லது வேலை வாய்ப்பு வழங்கினாலோதான் அவர்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அவர்களை கேலி கிண்டல்கள் செய்வது அவர்களை பார்த்து பயந்து ஒதுங்குவது அவர்களை ஒரு அருவெறுக்கத்தக்க விதமாக பார்ப்பது என்பது தீண்டாமை கொடுமை போன்றது. தான்.திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம

வடநாட்டவர்கள் அவர்களை தெய்வமாக மதிப்பார்கள்.பெரிய கடைகளை திறக்கும் பொழுது முதன்முதலாக அவர்களுக்கு கொஞ்சம் பணத்தை அளிப்பதை முக்கியமான அம்சமாக வடநாட்டவர்கள் வைத்திருக்கின்றார்கள்.  அதே போல அவர்கள் ஒரு கூட்டமாக வந்து சுற்றி நின்று பாடி ஆடி புதுகடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல் மரியாதை .

எங்கு திருநங்கைகளை பார்த்தாலும் அவர்களுக்கு இயன்ற உதவியை செய்து விட்டு பணம் அளித்தால் 1ரூபாய் கேட்டு வாங்குங்கள். அதே போல அவர்களை வசைபாடாதீர்கள்.ஒரு சிலர் வம்பு இழுக்க கூடிய நபர்களாக செயலாற்றினாலும் மன்னித்து விட்டு விடுங்கள்.அதுவும் என்றோ நீங்கள் அவர்களுக்கு இந்த ஜென்மத்திலோ போன ஜென்மத்திலோ தீங்கிழைத்தால்தான் அந்த கர்மத்தினை அனுபவிக்கும் பொருட்டு இது மாதிரி உங்களை அவர்கள் வம்பிழுக்கும்

சம்பவங்கள் நடக்கும்.வடநாட்டவர்கள் தங்கள் இல்லத்தில் அவர்களை உதவிக்கு வைத்திருப்பார்கள் அவர்களின் முகத்தில் விழிப்பார்கள் அவர்கள் மூலமாக கூட வியாபாரத்தை தொடங்குவார்கள்.திருநங்கைகள் பிச்சை எடுப்பதாக கருத வேண்டாம் அவர்கள் உங்கள் கர்மாவினை வாங்கி செல்கின்றார்கள் என்று கருதுங்கள்

உங்களால் இயன்றால் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக சகோதரியாக நினைத்து பழகுங்கள்.எந்த ஒரு உயிரினம் இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படுகின்றதோ அவர்கள்தான் கடவுளின் முதல் குழந்தை ஏனெனில் இங்கு புறக்கணிப்படுபவர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள

திருநங்கைகளில் நிறைய நல்ல குணங்கள் மனங்கள் கொண்ட ஆட்களை சந்தித்திருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும்.உங்கள் குழந்தைகளை முக்கியமாக அவர்களின் கைகளில் கொடுத்து கொஞ்ச விடுங்கள் அவர்களின் அனைத்து திருஷ்டியை எடுக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு.திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள்

நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது.தொழில் முடக்கம் தொழில் நஷ்டம் தொழில் விரக்தி வருமான தடை உள்ளவர்கள் உங்கள் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து ஒரு லக்ன நேரமான இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சாப்பாடு விருந்து போட்டு அனுப்பி பாருங்கள

உண்மையிலேயே மார்வாடிகள் சேட்டுகள் வடநாட்டு இந்தியர்களுக்கு அவர்களின் அருமை தெரியும்.தயவு செய்து அவர்களை பிச்சைக்காரர்களாக கருத வேண்டாம் அது தவறான கண்ணோட்டம்.திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் என்பதை உணருங்கள்.திருமணம் நடக்காதவர்கள் அவர்களிடம் சொல்லி திருமணம் நடக்க ஆசீர்வாதம் வாங்குங்கள்.  நடக்கும் குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள் நடக்கும் திருமணம் ஆனவர்கள் கணவனோ மனைவியோ கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள

தொழில் சிக்கல்கள் தடைகள் உள்ளவர்கள் தொழில் முடக்கம் உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள்.திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள்.ஒரு சில பேர் இந்த சமூகத்தால் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த அந்த இனத்தை கேவலமாக பார்க்காதீர்கள். திருநங்கைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்களை ஆசீர்வதிக்கும் புகைப்படத்தை அடிக்கடி பாருங்கள்.அதை நீங்கள் பொதுத்தளத்தில் வெளியிடலாம் ச்சீ என்று மட்டும் அவர்களை பார்த்து சொல்லி விடாதீர்கள்

அது மகாபாவம். திருநங்கைகள் உங்கள் கர்மாவினை குறைப்பதற்கு இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களை என்பதை உணருங்கள்.திருநங்கைகளை பற்றி இவ்வளவு எழுதுவதற்கு காரணம் இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் திருநங்கைகளுக்கு உதவி செய்தல்.திருநங்கைகள் சனியின் காரகத்துவம் புதனின் காரகத்துவம் ராகுவின் காரகத்துவம் கேதுவின் காரகத்துவம் என்று நாடி ஜோதிடத்தில் கூறியுள்ளது.எனவே அவர்களை என்றைக்கும்

புறக்கணிக்காதீர்கள்.ஜோதிடத்தில் முழுமூச்சாக இறங்கும் முன்பே அடியேனுக்கு அவர்கள் மீது எப்பொழுதும் ஒரு அன்பு இருக்கும் காரணம் எங்கள் தந்தையார் சொல்லிக் கொடுத்தது திருநங்கைகள் மூன்றாம் பாலினம் என்றாலும் அவர்கள் மிக முக்கியமான ஜீவன்கள்.அவர்களுக்கு காலத்திற்கும் உதவி செய் என்று அப்பா சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்த்துள்ளார்கள்.

ஜோதிடம் பயில்பவர்கள் ஜோதிடம் சொல்பவர்கள் திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்கி பாருங்கள்.இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே அவர்களுக்குதான் முதலில் தெரியும் ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள்.உங்களால் முடிந்தால் அவர்களை கடவுளாக கருதுங்கள் அப்படியில்லையென்றாலும் ஒரு உயிராக கருதுங்கள் என்றென்றும் இழிந்து பேசி விடாதீர்கள்.  நீங்கள் அப்படி பேசியிருந்தால் மானசீகமாக மன்னிப்பு மனதளவில் கேட்டுக் கொள்ளுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.