Breaking News :

Monday, February 10
.

உண்மையிலேயே சாக்ரடீஸ் தத்துவ ஞானியா?


உண்மையிலேயே சாக்ரடீஸ் தத்துவஞானியாகவே வாழ்ந்தார் 

நரகப் படுகுழியில் விழுந்து கிடப்பது போன்ற ஒரு குடும்ப வாழ்வையே முன்னெடுத்தார் 

அவரது மனைவி ஸாந்தீப் ஒரு கோணத்திலும் அதற்கு நேர் எதிர்கோணத்தில் சோக்ரடீஸும் வாழ்ந்து வந்தனர்.

 

தினமும் வெவ்வேறு சர்ச்சைகள் முரண்பாடுகள் மோதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. ஆனால் அவர் எதற்கும் பதில் அளிக்கவே இல்லை இப்படியே நாட்கள் நகர்வது வழமையாகி விட்டன.

 

அமைதியமாகப் பதில் கொடுத்து மோதலை ஊதிப் பெருப்பிக்க அவர் விரும்பவில்லை ஒவ்வொரு முறை இத்தகைய முரண்பாடுகள் வெடிக்கும் பொழுதெல்லாம் 

தன் வீட்டு முற்றவெளிக்கு வந்து அன்றைய பாடத்தை ஆரம்பிக்க மாணவர்களை எதிர்பார்த்து  காத்திருப்பார்.

 

இவை எதுவும் தன் கணவரை அசைக்காமல் இருப்பது

மனைவிக்கு இன்னும் ஆத்திரத்தை பன்மடங்காக்கியது 

ஆத்திரம் தீரும் வகையில் ஒரு வாளி நிரம்ப நீரைக் கொண்டு வந்து தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது தலையில் இருந்து தண்ணீரைக் கொட்டோ கொட்டன கொட்டி விட்டார். 

இவையெல்லாம்வற்றுக்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொண்ட சோக்ரடீஸ் செய்ததெல்லாம் தன் முகத்தில் வடிந்த தண்ணீரை கையால் தடவி துடைத்து விட்டதுதான் 

 

தன் மாணவர்களை பார்த்து இப்பொழுது நடந்ததை குறித்து ஆச்சரியப்பட வேண்டாம் இப்பொழுது மழை பொழிந்தது சற்று முன்னர் பயங்கரமாக இடி விழுந்து விட்டது

என்று சுவாரசியமாகவும் நாசுக்காகவும் சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார்.

 

தமிழில் 

அஹமத் பிஸ்தாமி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.