Breaking News :

Friday, April 18
.

சித்தர்கள் கூறும் வாழ்வியல் ரகசியங்கள்?


1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் ) வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்.

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்.
3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்.

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும் .

6) கண்கள் மனதின் வாசல் , நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .

கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது . உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும் இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் . உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்.
1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு , மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11) துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் , நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் . அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .  பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் , பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் . கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் . அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

 இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது பார்த்து உண்ணவேண்டும் .
 கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்கு தான் . வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

 அடுத்து மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன்.. என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் , மேலும் சரியான உணவு முறை பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

 காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது . வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது , அடிக்கடி இறைச்சி உணவு உண்பது , துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது.

சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் . ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும் பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் , சித்தர்களும் சொல்லுவார்கள் , இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் . அதன் படி உணவு முறைகளான இவைகள் ..

நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .

எந்த உணவை எப்படி சாப்பிடலாம் என்று முறை இருக்கிறது .
 சித்தர்கள் சொல்வது உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும் .

பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் . கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும் சக்கரை நோய் வராது,

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.