Breaking News :

Sunday, September 08
.

தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்


அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, சின்ன அண்ணன்,பெரிய அண்ணன், சின்ன அக்கா,பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன்,
அத்தை பொண்ணு,மாமன் பொண்ணு, மாமன் பையன்...

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.
யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !

அகராதியில் இருந்தே கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடலாம்!!!

காரணம்!!!

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் !

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை !

திருமணத்தின் போது அரசாணைக்கால் நடஎந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை !

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.
இனி யார் போவார் ?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.
ஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை, அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ, இல்லை தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் !

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே வயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடி வருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் மறந்துவிடக்கூடது  விட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக் கூடாது!

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ?

ரத்தம் ஏற்றுக் கொள்ளும் உறவு முறையில் திருமணம் செய்யுங்கள்.

மக்கள் மாறினால் இனி நீங்கள் உலர்ந்து போன உபயோகமற்ற இத்துப் போன தனி மரம்தான்.
ஜாக்கிரதை !!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.