இதை எவருமே அலுவலகரீதியாக , ஒரு தொழிலாக ஆரம்பிக்கவில்லை. தமிழ் நாட்டுச் சரித்திரத்தையே முதலில் பார்ப்போமே.தமிழ்நாட்டில் “தேவதாசி” (கடவுளுக்கு அடிமை ) என்கிற பெயரில் சில குடும்பங்களில் பொட்டு கட்டி விடும் வழக்கம் இருந்தது. கடவுளின் பெயரைச் சொல்லி ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கைப்பாவைகளாக அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.
நல்லவேளையாக 1947-ல் நிறைவேற்றப்பட்ட“தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்” இதையெல்லாம் சரித்திரம் ஆக்கி விட்டது. ஆங்கிலேயர் இரண்டாம் உலக யுத்தத்தின்போது, இந்தியாவில் பணியில் இருந்த ராணுவ வீரர்களின் மனச்சோர்வை போக்குவதற்காக, சில பெண்களை ராணுவத்திலேயே பணியில் அமர்த்தி இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் இட்ட செல்லப் பெயர் (comfort girls ).இராணுவ வீரர்களுக்கு “ஆறுதல்“ அளித்த அந்த அபலைப் பெண்களுக்கு எவர் ஆறுதல் அளித்தார்கள்?
சுடுகாட்டில் கூட ஜாதி, மதம் பார்க்கும் இந்தியாவில்ஜாதி, மத வித்தியாசம் பார்க்காத ஒரே தொழில், இடம் – இது தான் !
தேவதாசிகள் தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமாக இருக்கவில்லை. கி.மு.2400 வருடங்களுக்கு முன்னர் கோவில்களில் விபச்சாரிகள் வாழ்ந்துள்ளார்கள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சிகரமான தகவல். புராதன பாபிலேனியாவின் Uruk என்ற நகரில் வாழ்ந்த சுமேரிய மதக்குருக்களின் கண்காணி்பபில், kakum என்று அழைக்கப்பட்ட கோவில்களில் மூன்று நிலையில் பெண்கள் காணப்பட்டு்ள்ளார்கள். இந்தக் கோவில்களில் இஸ்தார் என்ற தெய்வத்தையே இவர்கள் வழிபட்டார்கள். நெதர்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரேக்க நாடு, துருக்கி, செனிகல், அமெரிக்காவின் நெவாடா மாவட்டம், அவுஸ்திரேலியாவின் சில மாவட்டங்கள், விபச்சாரத்தை சட்டபூர்வமாக அனுமதிக்கின்றன.
1800 களில் தெருக்களில் நடந்து திரிந்த பெண்கள்( streetwalking)தமது வருமானத்திற்காக இந்தத் தொழிலை நாடியிருக்கிறார்கள். கல்விக் குறைவு , ஏழ்மை, ஊழல்,லஞ்சம் -இந்த நான்கு காரணங்களும் தாய்லாந்தை இன்று இத் தொழிலில் மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. ஜப்பானில் இன்று சட்டரீதியாக விபச்சாரம் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் 16ஆம் நுாற்றாண்டில் களிப்பூட்டும் பெண்களாக
( ஜப்பானிய பெயர் yūjo)இருந்துள்ளார்கள். இவர்களுக்கு விபச்சாரிகளாக தொழிலாற்ற அனுமதி வழங்கினார்கள். 1750களில் இருந்த Yoshiwara என்ற சிகப்பு விளக்கு கேளிக்கை மையம் உலகப் பிரசித்தமானது. இது இன்றைய ரோக்கியோ நகரப் பகுதியாகும் .
முதன்முதலாக என்று கேட்டால் சுமேரியர்களுக்குத்தான் அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும். இன்றைய தென் ஈராக்தான் அன்றைய சுமேரியா ...சுமேரிய நாகரீகம் உலகில் தோன்றிய நாகரீகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரீகமாகக் கருதப்படுகிறது.