பெண் பிள்ளைகள் எந்த ஆடை உடுத்தினாலும் அதில் உள்ள அழகே தனி. என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் நம் கண் முன்னே வந்து நிற்பது லட்சுமி கடாச்சமாக தோற்றமளித்த அந்த பாவடை தாவணி அணிந்த முகம் தான்.
அதேபோல் இன்றைய மாடர்ன் பெண்களும் ஏதாவது விழா என்றால் பாவடை தாவணி அணியதான் செய்கிறார்கள்.
நம் முன்னேர்கள் எதற்காக பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணி அணிய செய்தார்கள் தெரியுமா?
பருவமடைந்த பெண்கள் பருவமடைந்ததில் இருந்து, பெண்களுக்கு கர்ப்பை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவடை தாவணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.
எதற்காக இந்த காற்றோட்டம் தேவைப்படுகிறது?
பெண்களின் கர்ப்பையில் அதிக உஷ்ணம் ஏற்படாமல் தடுத்து கர்ப்பையை காக்கும் என்பதற்காகத்தான் இந்த பழக்கம் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் மாடர்ன் ஆடைகள் வந்ததால் காற்றோட்டம் இல்லாமல் கர்ப்பை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பையில் நீர்க்கட்டி உருவாகிறது.
இதனை ஆங்கிலத்தில் Polycystic Ovarian Disease (PCOD) என அழைக்கப்படும். இந்த நீர்க்கட்டிகள் உடல் உஷ்ணம் அடைவதால் ஏற்படுவதே. ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும். இந்த பிரச்சனையால் பிற்காலத்தில் குழந்தையின்மையை தருகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
இதனை மனதில் வைத்தாவது அடிக்கடி பழமை மாறாமல் பாவடை தாவணி சேலைகள் அணிந்து பழகுவது நல்லது.