ஒரு மனிதனின் ஆயுட்காலம மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டால் மிக அதிகம்! மனிதனை தவிர கருவிலே 300 நாட்கள் தாண்டும் ஒரே உயிரினம் யானை மட்டும் தான்!
பத்து மாதம் கருவில் மட்டுமல்ல அதற்குப் பிறகும் இரண்டு மூன்று வருடங்கள் பெற்றோர்கள் இல்லாமல் மனித இனம் வாழ முடியாது! அதற்கு பிறகு ஒரு பத்து பதினைந்து வருடங்கள் ஒரு குழந்தை அதன் தாய் தந்தையருடன் வளர்ந்தால் தான் மனோரீதியாக 60 அல்லது 70 வருடங்கள் அந்த அந்த குழந்தை ஆரோக்கியமாக மனதளவில் பிரச்சினை இல்லாமல் பிற்காலத்தில் வாழமுடியும்!
தந்தை இல்லாமல் போய்விட்டால் பெண் குழந்தை மனதளவில் பாதிக்கப்படும்! தாய் இல்லாமல் போய்விட்டால் ஆண் குழந்தை மனதளவில் பாதிக்கப்படும்! ஆனால் மற்ற விலங்குகள் இப்படி தந்தை தாய் இரண்டு பேரும் பல வருடங்கள் சீராட்டி பாராட்டி வளர்க்கத் தேவையில்லை! ஏனென்றால் ஒரு பூனைக்கு அல்லது ஒரு நாய்க்கு ஆயுட்காலம் மனிதனை விட மிக கம்மி!
குட்டி போட்டுவிட்டு தந்தை டாட்டா காட்டிவிட்டு சென்று விடலாம்! குட்டி போட்ட பெண் பூனைக்கு ஆண் துணை ரொம்பவும் தேவையில்லை வளர்ப்பதற்கு!
ஆனால் மனிதன் பத்து வயதில் பள்ளியில் சேர்க்கும்போது கூட ஒரு தந்தை குறிப்பாக பயாலஜிக்கல் தந்தை அவசியம்! 15 வயதுவரை தாய் இருப்பது அதுவும் தந்தையுடன் கூட இருப்பது அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம்!
20 வருடம் இரண்டு பேரும் குழந்தைகளுக்கான ஒன்றாக வாழ்க்கை நடத்துவதற்கு அறிவியல் ரீதியாக " PAIR BONDING " பேர் பாண்டிங் என்று பெயர்!
இப்படி இரண்டு பேர் குழந்தை வளர்ப்புக்கா௧ குறைந்தபட்சம் ஒரு இருபது வருடம் சேர்த்து வைக்க வேண்டும் என்றால் " ஒருவனுக்கு ஒருத்தி" என கலாச்சாரத்தைக் காரணம் காட்டி ஒழுக்கத்தை மேற்கோள்காட்டி கணவன் மனைவி இருவரும் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! அப்போதுதான் அடுத்த சந்ததி மனதளவில் பிரச்சினைகள் இல்லாமல் வளரும்! இதுதான் முக்கியமான காரணம்!
எனவே கணவன்-மனைவி ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மிக மிக உதவிகரமாக இருக்கும்! இருபது வருடங்களில் பிள்ளைகளை வளர்ப்பது ஒரு பெண்ணுக்கு துணை இல்லாமல் மிகவும் கடினம்! குறிப்பாக அந்தப் பிள்ளைகளை பெற்ற தந்தை கூட இருப்பது அந்தக் குடும்பத்திற்கும் பாதுகாப்பு! விதிவிலக்குகள் இருக்கலாம்! ஆனால் முடிந்தவரை " ஒருவனுக்கு ஒருத்தி" என்று வாழ்வது குடும்பத்துக்கு மட்டுமல்ல மொத்த சமூகத்திற்கும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி கொடுக்கும்!