திருமணமான சிலகாலங்கள் வரை செல்லம், குட்டி, அழகி என்றெல்லாம் கூப்பிட்டுப்போட்டு கொஞ்சக்காலம் போனதும் பெயர் சொல்லிக் கூப்பிடவே பஞ்சிப்படுதல்.
கோபம் கொள்கிறேன் என்ற பெயரில் கெட்டவார்த்தைகளால் பேசுதல்.
ஒருநாள் சாப்பாட்டில் உப்போ உறைப்போ கூடிவிட்டால் தினமும் அப்படித் தான் செய்து கொடுப்பது போல் எரிந்து விழுதல்.
காதல் திருமணம் என்றால் காதலிக்கும் போதோ/ திருமணமாகி சிலகாலங்கள் வரையோ மனைவியின் பிறந்தநாள் என்றால் ஒருமாதத்திற்கு முன்னரே பெரிய திட்டம் எல்லாம் போட்டு மனைவி போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு வாழ்த்துக்களாலும் பரிசுப்பொருட்களாலும் சந்தோசப்படுத்தி விட்டு, ஒரு 4/5 வருடங்களில் மனைவியின் பிறந்தநாளையே மறந்து போய் சின்னனா ஒரு வாழ்த்து கூட சொல்லலாம் இருப்பது..
மாதவிடாய்காலங்களில் மனைவியை ஒதுக்கிவைத்தல். அவர்களின் ஆடைகளில் இரத்தக்கறை படிந்திருப்பதை ஒருவேளை பார்த்தாலோ அருவருப்படைதல்.
(ஒரு சில கணவர்கள் மட்டும்)
மனைவிக்கு மாதவிடாய் என்று தெரிந்தும் உடலுறவுக்கு அழைத்தல், மறுத்தால் பலவந்தப்படுத்தல்.
மனைவி எதையாவது பார்த்துப் பயந்தாலோ/ அழுதாலோ கண்டுகொள்ளாது விடுவது அல்லது "ஏன் இப்பிடி நடிக்கிறாய்" என்று அலட்சியப்படுத்துவது.
"ஏன் உன்னைக் கட்டினேன் என்று இருக்கு " என்று அடிக்கடி பேசுதல். காதல் திருமணமாக இருந்தால் "உன்னைக் கட்டினதுக்கு அம்மா அப்பா பாத்து வைச்ச பொண்ணக் கட்டி இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பன் " என்ற வசனங்களைப் பயன்படுத்தல்.
தன் மனைவிக்கென்று தனித்தன்மை இருப்பதை உணராமல் தன் அம்மாவுடனோ/ அக்கா, தங்கச்சியுடனோ ஒப்பீடு செய்து பேசுவது. பிற உறவுகளிடம் மனைவியின் குறைகளைக் கூறுதல்.
மனைவி இருக்கும் போதோ/ இல்லாத நேரத்திலோ தம் உறவுப் பெண்களுடன் அளவுக்கு மீறி அவசியமில்லாமல் பேசுதல், விளையாடுதல், உடல் அங்கங்கள் படும்படி அருகருகே இருத்தல்.
மனைவிக்குத் தெரியாமல் வெளியூருக்குச் செல்லுதல்/ வெளியூருக்குச் சென்ற பின்னர் தகவல் தருதல்.
திருமணமான புதிதில் மனைவியின் அணைப்பின்றி நித்திரை கொள்ளத் தயங்கிவிட்டு, சிலபல வருடங்கள் கடந்ததும் இரவுநேரத்தில் ஆசையாக மனைவி கட்டியணைத்தபடி நித்திரைகொள்ள முற்படும் போது சினந்து கொள்ளவோ அல்லது கைகளை உதறிவிட்டுவிட்டு "கொஞ்சம் தள்ளிப்படுக்கிறியா வெக்கையாக் இருக்கு என்று சொல்லுவது..
உடல்ரீதியான தன் ஆசைகள் நிறைவேறியதும் மனைவியும் திருப்தியடைந்தாளா இல்லையா என்ற எண்ணமே இல்லாமல் தன்பாட்டிற்கு நித்திரைக்குச் செல்லுதல்.
மனைவிக்கு உடல் நலன் நன்றாக இல்லாததை அறிந்தும் அறியாதது போல அவளிடம் வேலை வாங்குதல்.
குழந்தைகளுக்கு முன்னால் மனைவியை மரியாதை குறைவாகப் பேசுதல்.
இந்த மாதிரி தவறுகளை கணவர்கள் செய்யாதீர்கள் பெண்களும் பாவம் தானே!