Breaking News :

Wednesday, April 24
.

பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுக்கும் முறை


வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் செல்வம் வளரும், கல்வி, மகிழ்ச்சி மலரும் என்பது நம்பிக்கை.
#தேங்காய்_உடைப்பவர்கள், அமாவாசை அன்று காலையிலேயே ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் கலந்து தண்ணீரும் சுத்தம் செய்த தேங்காய் ஒன்றும் சாமி படத்தின்முன் வைத்து வழிபட வேண்டும் பிறகு.மதியம் 12 மணிக்கு கடை அல்லது வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீரால் தேங்காயை கழுவி. குடுமியில் ஒரு விலை கற்பூரத்தை வைத்து ஏற்றி, கடை மற்றும் வீட்டை பார்த்தாற்போல் நின்று வலப்பக்கமாக மூன்று சுற்றும், இடப்பக்கமாக மூன்று சுற்றும் சுற்றி வாசலில் உடைக்க வேண்டும்.. உடைபடும் தேங்காய் சில்லு சில்லாய் உடைபடுமாறு ஓங்கி அடிக்க வேண்டும். தேங்காய் சில்லுகளை உரிமையாளர்கள் எவரும் எடுக்கக் கூடாது.

வெள்ளை_பூசணிக்காய்: பூசணிக்காயின் காம்பு பகுதியில் வில்லை போல் துளையிட்டு அதில் மஞ்சள் குங்குமம், ஒன்பது ரூபாய்க்கான சில்லறைகளை போட்டு மூடிவிட வேண்டும். பிறகு பூசணிக்காய்க்கு மஞ்சள் குங்குமம் பூசி, மஞ்சள் தண்ணீர் தெளித்து வாசலில் வைக்கவேண்டும். பூசணிக்காயை உடைக்கும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டாயம் கட்டி இருக்க வேண்டும் ஏனெனில்,. பூசணிக்காய்க்கு திருஷ்டிகளை கவரும் சக்தி உண்டு. அதனால், பூசணிக்காயை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். இதனால் அவருக்கு எதுவும் நேராமல் இருக்கவே இந்த கருப்பு கயிறு. மேலும் பூசணிக்காய் உடைப்பவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். பூசணிக்காயை உடைத்தபிறகு மஞ்சள் நீரை தெளித்துவிட்டு அப்படியே சென்று விடுவது உத்தமம். உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் மஞ்சள்நீர் தெளித்துவிட்டு கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு கடை மற்றும் வீட்டிற்குள் வரலாம். உடைத்த பூசணிக்காயை மஞ்சள் நீர் தெளித்த பிறகு மற்றவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்புறப்படுத்துவது சிறப்பு. 
#எலுமிச்சம்பழம்: கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும்படி கடை வாசலில் வைக்கவும். கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி இடம் வலமாக மாற்றி எறியவும். மற்றொரு எலுமிச்சம் பழத்தில் மஞ்சள் குங்குமம் பூசி, கற்பூரம் வைத்து ஏற்றி, வீடு/கடையினை பார்த்தவாறு இட வலமாக மூன்று சுற்றுகள் சுற்றி வாசலில் உடைத்து இரு பாகமாய் கிழித்து வலக்கையில் இருப்பதை இடது புறமாகவும், இடதுகையில் இருப்பதை வலது புறமாகவும் வீச வேண்டும். இதை அமாவாசை தினத்தில் மட்டுமல்லாமல் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகலிலும் செய்யலாம். இதனால் தீய சக்திகள் மற்றும் திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும்.
தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் என எந்த பலி கொடுத்து முடித்ததும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலை மற்றும் உடம்பில் தெளித்துக்கொண்டு சுத்தி போட்டவர், உள்ளே வந்ததும் தண்ணீர் குடிக்க கொடுக்கவும். இப்படி செய்து வருவதால் தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.