Breaking News :

Thursday, February 06
.

காம உணர்வுகளை சீர்குலைக்கும் மாமியார்கள்!


கணவன் மனைவிக்கு இடையில் காதல், காம உணர்வுகளை சீர்குலைக்கும் மாமியார்கள். பெரும்பாலும் காமத்தை தடுக்கும் அளவு மனைவியின் வீட்டில் நடைபெறுவது இல்லை.

இவ்வுலகில் அனைத்து மாமியாரும், ஒரு மருமகளாகவும், அனைத்து மருமகளும் ஒரு மாமியாராக அவதாரம் எடுக்கக்கூடியர்வர்கள்தான்.

ஒவ்வொரு ஆண்களும் இதை புரிந்து கொள்ளவேண்டும்.  இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளாமலேயே, முகத்தில் எந்தவித உணர்ச்சிகளை வெளியில் காட்டிகொள்ளாமலேயே மனதிலேயே இரண்டு பெண்களும் சண்டையிட்டு தூக்கில் தொங்கும் அளவுக்கு கூட அவர்கள் துணிவார்கள்.  

இதை எந்த ஒரு ஆண் இனத்தாலும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. ஆணை பொறுத்தவரை அம்மா என்றால் எப்போதும் அவனுக்கு அம்மாதான் ஆனால் அதே அம்மாவுக்கு தன் மகன் திருமணம் முடிந்தபிறகு அந்த அம்மாவுக்கு மகனாக தெரிவது இல்லை.  அம்மா மாமியார் என்ற அவதாரம் எடுக்கிறார்.

ஆணின் இல்லற வாழ்வை அல்லது காம உணர்வுகளை கொள்வதில் மாமியார்,  மருமகள் சண்டை பெரும் பங்கு வகிக்கிறது.  இந்த சண்டையால் கணவன் மனைவியின் பாலுறவு வாழ்கை பாதிக்கப்படுவதால் குடும்ப வாழ்க்கை நரகமாக மாறுகிறது.

கூட்டு குடும்பமாக இருக்கும்போது இந்த சண்டைகளால் பெரும்பாலும் வீட்டிற்கு இரவு தாமதமாகவே ஆண் வருகிறான்.

திருமணமான முதல் நாளிலேயே மணமகள் வீட்டில் அடி எடுத்து வைத்தவுடனே. கணவனின் அம்மாவிற்கு மாமியார் என்ற உயர் பதவி கிடைத்த அதிகாரி போல் தன்னை உணர்ந்து கொள்கிறார் கணவனின் அம்மா.

மருமகள் எப்படிபட்டவள், என்னமாதிரியான குணம் என்று ஒரு புலனாய்வு  அதிகாரி போல் மறைமுகமாக நோட்டம் ஈடுகிறேன் என்று மருமகளுக்கு தெரியும் படியே நோட்டம் ஈடுகிறார்.

திருமணமான புதிதில் மனைவி பெரும்பாலும் இதை கண்டுகொள்வது இல்லை.  மாமியாரின் விருப்பத்திற்கு ஏற்ப மனைவியும் நடந்து கொள்கிறாள்.

ஆனால் போக போக மாமியாரின் நெருக்கடிகள், கட்டளைகள் அதிகரிக்க தொடங்குகிறது.  எப்போது பாலுறவு வைத்து கொள்ளவேண்டும், எப்போது பாலுறவு வைக்கக்கூடாது என்று இன்றைய மருமகளுக்கு அறிவுரை கூறுகிறார்.

இவ்வாறு உத்தரவு ஈடும்போதுதான் பிரச்சனைகள் உருவாக ஆரம்பம் ஆகின்றன.

இரவில் கணவனுடைய காம விளையாட்டில் இரவு தாமதமாக படுக்க நேரிடுகிறது அந்த பெண்ணுக்கு.  இரவில் தாமதமாக உறங்கியதால் மனைவி அதிகாலை எழுந்திருக்க முடியாமல் சிறிது தாமதமாக எழுத்துருக்கும்போது மாமியாரின் கேவலமான பார்வை அந்த பெண்ணிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் பார்வையாக மாறுகிறது.

ஆனால் இது எதுவுமே கணவனுக்கு தெரியவில்லை.

அனைத்தும் மாமியாருக்கும், மருமகளுக்கும் மறைமுகமாக இருவரின் மனதிலும் நடைபெறும் யுத்தம்.

அதுவரை மாமியாருக்கு அடங்கி போன பெண் மாறத்தொடங்குகிறாள்.  மாமியாருக்கு மரியாதை கொடுப்பதை நிறுத்துகிறாள்.  

மரியாதை கொடுக்கவில்லை என்று மாமியார் அடுத்த நொடியே அறிந்துகொள்கிறாள்.  முழுக்க முழுக்க யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது.  இந்த யுத்தத்திற்கு காரணம் மாமியாரின் பொறாமை உணர்வு வேறு எதுவும் காரணம் இல்லை. 

ஆனால் மகனுக்கோ தன் அம்மாவை அவ்வாறு கற்பனை செய்து கொள்ள பார்க்க முடியவில்லை ஏனென்றால் சிறுவயதிலிருந்து பாலூட்டி, சீராட்டி, உணவூட்டி தனக்கு இல்லை என்றாலும் தன் மகனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அம்மாவை அவ்வாறு அவன் நினைப்பது இல்லை.  தன் இறுதி காலம் வரை தன் அம்மாவை அம்மாகவே நினைத்து கொள்கிறான் ஒரு ஆண்.

அம்மாவின் பொறாமை உணர்வு அவளுக்கே தெரியாமல் உருவாகிறது ஏனென்றால் மகன் மேல் உள்ள பாசத்தை ஒருவள் அபகரித்து விட்டால் என்பதை அவன் அம்மாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஆனால் இது இவனுக்கு புரிதல் இல்லாமல் தன் மனைவிக்கு எதிராக கணவன் போர்க்கொடி தூக்குகிறான்.  இவ்வாறு  குடும்பத்தில் மாமியார் மருமகள் பிரச்சனைகள் ஆரம்பம் ஆகிறது.

தாயையை பொறுத்தவரை தன் மகன் இவ்வளவு வருடங்களாக தானே உலகம் என்று சுற்றி சுற்றி வந்தவன், அவன் மேல் உயிரையே வைத்திருந்த தாய்.

திருமணம் முடிந்த பிறகு அதே அன்பில் அம்மா இருக்கிறாள் ஆனால் இங்கு மகன் மாறிவிட்டான்.  தன் அம்மாவிடம் இருந்ததை விட பலமடங்கு அவன் மனைவியிடம் சுற்றி சுற்றி வருவது அந்த அம்மாவுக்கு புதிதாக இருக்கிறது.

இதை அந்த பெண்தான் என் மகனை மாற்றிவிட்டால் என்று தாய் எண்ணுகிறாள் ஆனால்  அவன் அம்மாவிடம் இருந்த அன்பு சிறிதளவு கூட மாறவில்லை ஆனால் அவனது மனைவியை காமத்தின் வழியாக தன் மனைவியிடம் அணுகுவதால்.  தாய்க்கு தன் மகன் மாறிவிட்டான் என்று தோன்றுகிறது.

ஆனால் மனைவி தன் கணவனிடமும் கொஞ்சி விளையாடிவிட்டு.  மருமகள் தன் அம்மாவிடமும் தினமும் இரண்டு மணி நேரமும் பேசுகிறாள் ஆனால் நம் மகன் தன்னிடம் சிறிது நேரம் கூட செலவு பண்ணாமல் மனைவியின் பின்னாடியே செல்கிறானே என்று மனதிற்குள் தாய் புலம்புகிறாள் இவ்வாறு தன் மகனை மாற்றிவிட்டாளே என்று மருமகளையும் சபிக்கிறாள்.

பெண் பெரும்பாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக குகைகளிலும், வீடுகளிலும் இருந்தவள் அவளிடம் யாராவது அன்புக்குரியர்வகள் தினந்தோறும் பேசியாக வேண்டும் அவ்வாறு பேசவில்லை என்றால் வெறுமையாக உணர்கிறாள்.  பெண் எப்போதும் வெறுமையை வெறுப்பவள் அவள் தனக்குள்ளயே பல உயிர்களை உருவாக்கக்கூடிய சக்தி உடையவள் அவளுக்கு தனிமை பிடிப்பது இல்லை இதனால் நன்கு பேசும் ஆண்களின் வலைக்குள் விழுகும் பெண்களும் உண்டு.

ஆனால் ஆணுக்கு ஆதிகாலத்தில் வேட்டையாட வெளியில் சென்றாக வேண்டும், வேட்டை ஆடும்போது அவன் மூச்சு காற்றே அவனுடைய உயிரை பறிக்கக்கூடிய விலங்குகள் நடமாட்டம் அதனால் அவன் பேசுவது இல்லை.  ஆண்களுக்கு தேவையின்றி பேசுவது பிடிக்காது என்பது உளவியல்.

இந்த உளவியல் உண்மை பெண்களுக்கு தெரிவது இல்லை. அதனால் தலையணை மந்திரம் போட்டு மயக்கிவிட்டால் என்று மாமியார் நினைக்கிறார்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.