Breaking News :

Sunday, September 15
.

விவாகரத்துக்கு பெற்றோர்கள் காரணமா?


வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதை பார்த்து நாம் வருத்தப்படுகிறோம்.

ஆனால் 95% விவாகரத்துக்கு காரணமே ஒன்று கணவன் வீட்டு பெற்றோர்கள் அல்லது மனைவி வீட்டு பெற்றோர்கள் என்று இவர்கள் பக்கம் யாரவது ஒருவர் தான் முக்கிய காரணமாக உள்ளார்கள். உலகத்தின் போக்கிற்கு இவர்கள் பெரும்பாலும் அப்டேட் ஆவதே இல்லை.

தன் பிள்ளையின் மீதுள்ள பாசத்தாலும், தன் பிள்ளைக்கு எதுவும் விவரம் பத்தாது என்று அவர்களே நினைத்து கொள்வதாலும் இவர்களே கற்பனையான பிரச்சனை யை உருவாக்கி விடுவார்கள். ஒரு சின்ன விஷயத்துக்கு கூட serious ஆகி தனது பிள்ளையையும் serious ஆக்கி வெட்டி பிரச்சனைகளை உருவாக்குக்கிறார்கள். நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஏதாவது வெட்டி சண்டை மூட்டி விடுவது பெரும்பாலும் பெற்றோர்களே!

தற்போது கூட தெரிந்த ஓர் நபர் என்னிடம் புலம்பினார். அவரின் வாழ்க்கை துணைக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தாலும், மாமியார் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் வெட்டி சண்டை மூட்டுவதை தாங்க இயலாமல் கஷ்டப்பட்டார். இதனாலேயே பெரும்பாலான மக்கள் தாங்களாகவே தனிக்குடித்தனம் வாழ விரும்புகிறார்கள் அல்லது நாட்டை விட்டே விலகி NRI வாழ்க்கை வாழ விழைகிறார்கள்.  NRIயாக தனிக்குடித்தனம் வாழும் மருமகள்கள் சொந்த ஊரில் ஒரு வருடம் கூட மாமியார் வீட்டில் வசிக்க இயலாது.

பல குடும்பங்கள் அழிய பெற்றோர்களே மிக முக்கிய காரணம். ஆனால் அவர்கள் மேல் பழி வராமல் சர்வ சாதாரணமாக சகுனித்தனமாக தப்பித்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இதில் விதிவிலக்கு. மீதி எல்லாமே நான் கூறிய ரகம் தான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.