நரக வாழ்க்கை தான் இருவருக்கும்.. தெரிந்து கொள்ளுங்கள்..விவாகரத்து எப்போதும் மகிழ்ச்சியை தராது என்பதுதான் நிதர்சனமான உண்மை
ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை.. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்தே அமையும்
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி கடந்த கால கசப்புகளை தூக்கி எறிய வல்லமை வேண்டும்.
சிலர் வேண்டி விரும்பி விவாகரத்து பெற்றுக் கொள்வதால், விடுதலை பெற்று பிரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால்
உடனடியாக வேறு ஒரு பந்தத்திற்குள் இணைவது போல இருந்தால், அவர்களது எல்லா எதிர்பார்ப்புகளும் இந்த வாழ்க்கையில் கிடைத்தால்?? ஒருவேளை மகிழ்ச்சியாய் யிருக்க வாய்ப்புண்டு
ஆனாலும்.. கேள்விக்குறிதான்.
விவாகரத்துக்குப் பிறகு, குறிப்பாக இந்தியாவில் ஆணோ இல்லை பெண்ணோ வேறொரு உறவில் ஈடுபடும் எண்ணம் இருக்கும்.சமூக தீர்ப்பு மற்றும் களங்கம், கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யும் பயத்துடன் இணைந்து, புதிய உறவுகளைத் தொடர ஆண்களை விட பெண்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். புதிய உறவுக்குள் இணைவது அத்தனை சுலபம் இல்லை
திருமணத்தை முறிக்கும் செயல்முறை வேதனையானது. சில நேர்மறையான பண்புகளை உருவாக்கி, இந்த சூழ்நிலைக்கு பரஸ்பரம் இருவரும் எப்படி வந்தீர்கள், ஏன் இந்த மனைவி/ கணவரை தேர்ந்தெடுத்தீர்கள், உறவில் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள், உங்களைப் பற்றி சுயமாக சிந்திக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியைக் காண வாய்ப்பு இருக்கிறது.நம்பிக்கை கூடும்
விவாகரத்து பற்றிய எண்ணம் தோன்றாது.
விவாகரத்து செய்வதற்கு முன் பல விஷயங்களை இருதரப்பிலும் சிந்தித்துப் பார்த்து அதன் பின் விளைவுகளையும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, பின்னரே விவாகரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும்.
நல்லதே நினைப்போம்..