Breaking News :

Monday, March 20

மரணம் ஒரு ஆனந்தம்

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடணும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .

நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.