Breaking News :

Wednesday, October 16
.

உடலுக்கும் மனதிற்கான மருந்துகள்?


செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தை செலவழியுங்கள்.

ரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை என்ஜாய் பண்ணுங்கள்.

முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்து பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக் குழந்தைகளையோ, நீங்கள் செத்த பிறகு தான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள்.

நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம் ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும் அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை மனதில் வையுங்கள்..

உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலை விதிப்படி தான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ..

நீங்கள் மாங்கு மாங்கென்று என்ன தான் உழைத்தாலும், தினசரி வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த காலத்தில் இருந்து, சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம் வரை,ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்? ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

ஒரு நாள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக் கொள்ளுங்கள். 'வந்ததை வரவில் வையுங்கள் சென்றதை செலவில் வையுங்கள்' அது தான் கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்த மகிழ்ச்சிக்கான சூத்திரம்..

எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய், நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது..

உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள் வாழ்க்கை தனிமைப் பட்டுப் போய் விடும்.

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும், நடப்பிற்கும் உள்ள இடைவெளி தான் மன அழுத்தத்தை உண்டு பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக, அதிகமாக, மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர் பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அடிக்கு அடி, சரிக்கு சரி, என்ற போட்டி மனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக் கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள். அது தான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.