Breaking News :

Friday, July 19
.

பகவத் கீதை கூறும் வாழ்க்கை போதனை என்ன?


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..
2. தேவைக்கு செலவிடு..
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5.  ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்..
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே..
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்..
31. வாழ்வை கண்டு களி..
32. ரசனையோடு வாழ்..
33. வாழ்க்கை வாழ்வதற்கே!
34. நான்கு நபர்களை புறக்கணி:
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗ஏமாற்றுக்காறன்
🤗ஓய்வாக இருப்பவன்
35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே:
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே:
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே:
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
38. நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி:
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
39. நான்கு நபர்களை வெறுக்காதே:
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
40. நான்கு விஷயங்களை குறை:
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
41. நான்கு விஷயங்களை தூக்கிப்போடு:
🏃துக்கம்
🏃பொறாமை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு:
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
43. நான்கு விஷயங்கள் செய்:
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.