Breaking News :

Friday, November 08
.

கெட்டவார்த்தை ஏன்? எப்படி?


உலகையே அன்பு கொண்டு பார்க்க வேண்டும் என்று சொன்ன சைவ மதம் இன்னும் தழைத்தோங்கும் பூமி நம்முடையது. இருப்பினும் ஒற்றை வார்த்தையில் பல வருட உறவை தொலைத்தவர்கள் இங்கே அதிகம். அடிப்படையின் முரண்பட்ட இரண்டு செயல்கள் ஒரே இடத்தில் இருப்பதை சற்று வியப்பாக தான் பார்க்க வேண்டியுள்ளது.

சிம்புவின் 'வல்லவன்' திரைப்படத்திற்கு கல்லூரி நண்பர்கள் சிலருடன் படம் பார்க்க சென்றிருந்தேன். திரைப்படம் சரியாக ஓடாததால் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் நண்பர்களின் கமெண்டால் படம் போராகவே தெரியவில்லை.

அதில் ரீமாசென் ஏய் நான் கீதா… என்று கத்தவும், அதற்கு சிம்பு போடீங்… என்ற பிறகு உதட்டசைவு மட்டும் திரையில் காட்ட…ஓத்தா… என்று திரையரங்கே கத்தியது. அத்தனை பேர் கெட்ட வார்த்தை பேசுவதை அப்போது தான் வாழ்க்கையிலே முதல் முறையாக பார்த்தேன்.

கெட்டவார்த்தைகள் பெரும்பாலும் கிராமங்களில் கிண்டல் செய்வதற்கும், கோபத்தில் திட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. திட்டுவதால் எதிரேயிருக்கும் நபர் அவமானப்பட வேண்டும் என்பதே குறிக்கோள். அதனால் அவரை சமூக மதிப்பிட்டின் எதிர்திசையில் கேலிக்கு உள்ளாக்குவது திட்டுபவரின் வேலை.

தமிழ்நாட்டில் தாயையும், தமக்கையும் பின் தாரத்தையும் வைத்தே ஆண்மகன் வசை பாடப்படுகிறான். தந்தை, தமயன் எல்லாம் அடுத்த நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

ஒரு பெண்ணை வசை பாடும் போது அவளது கணவனை விடவும் அவள் கற்பே முதன்மையாக வைக்கப்படுகிறது. இது ஆணாதிக்கத்தால் வந்தது என்கிறார்கள். குழாயடியின் சண்டையிடும் பெண்களுக்கிடையே ஆணாதிக்கம் கொண்டுவந்தது யார் என தெரியவில்லை.

வட்டார மொழியைப் போல ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு வார்த்தைகள் கெட்டவார்த்தைகளாக அறியப்படுகின்றன. சில விவகாரமான வார்த்தைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் கூட வியப்புதான். உதாரணமாக சில இடங்களில் தாயோளி என்ற வார்த்தை சகஜமாக பேசப்படும். வக்காலோளி என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின்னும் கூட இயல்பாக அதை பேச்சில் பயன்படுத்தப்படும் நபர்கள் எங்கள் பகுதியில் ஏராளம்.

புதுச்சேரிப் பகுதியில் தூமை என்ற வார்த்தையை பரவலாக பயன்படுத்துகின்றனர். அதைச் சொல்லுகின்ற சில நண்பர்களுக்கு கூட அதன் அர்த்தம் தெரியவில்லை. நான்கு வருடங்கள் அந்த வார்த்தையோடு பழக்கம் இருந்தாலும், மிக சமீபத்தில் தான் அது மாதவிடாயின் போது வருகின்ற ரத்தத்தை குறிப்பதை அறிந்து கொண்டேன். உதிரப் போக்கு என்ற இயற்கை நிகழ்வை மறைத்ததால் இந்த நிலை.

கெட்ட வார்த்தைகளாக மக்களிடையே பரவியிருக்கும் பல சொற்கள் கலவியையும், குறிகளையும் குறிப்பது. அதிக வார்த்தைகள் பெண்களை கேலி செய்வதாக இருந்தாலும், ஆண்களையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. ஒரு ஆண் செய்த தவறுக்கு ஏன் அவன் தாயையும், தமக்கையையும் தூற்றப்படுகின்றார்கள் என பெண்ணியவாதிகள் கோபம் கொள்கின்றார்கள்.

புண்டை என்பதையே யோனி, மன்மத மேடு, பெண் குறி என்றெல்லாம் சற்று புதிய சொற்களாக மாற்றி எழுதப்படுகிறது. புண்டை என்பதை காட்டிலும் யோனி என எழுதுவது தான் கவித்துவமாக மாற்றப்பட்டிருக்கிறது. பெண் கவிகள் புண்டை, முலை, யோனி என்றெல்லாம் கவிதையெழுதி அந்த வார்த்தைகளின் மீதான தாக்கங்களை குறைத்து வருகின்றார்கள். பரவலாக பழகிவிட்ட வார்த்தைகள் கூச்சமோ, கோபமோ தராது என்பதால் அவர்களின் உத்தியும் சிந்திக்க வைப்பது தான். லிங்கம், குஞ்சு, மார்பு, இடுப்பு என்பதையெல்லாம் ஏற்கனவே நம் கவிஞர்கள் பாடி பரவலாக்கி விட்டாததால் அது கெட்ட வார்த்தைகளாகவில்லை.

நான் இதுவரை எடுத்துக் கொண்டதெல்லாம், ஒரு வழக்கத்தில் இருந்த மாறுபட்ட சொற்களை மட்டும் தான். ஆனால் கெட்ட வார்த்தையில் சாதி வெறியும் உண்டு என்பது தெரியும் போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ சலுகைக்காக எல்லா மாணவர்களின் பெயர்களையும், சாதியுடன் எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்ட போது தான் பாப்பாத்தி, ஒட்டச்சி என்ற சொற்களெல்லாம் சாதியை சார்ந்தவையாக இருக்கின்றன என்பது புலப்பட்டது.

வசைகளுக்கு மட்டுமன்றி அடுத்த சாதியை தாழ்த்தி சொல்வதற்கும் வகை செய்தவர்கள் கொடூரமானவர்களாத் தான் இருக்க வேண்டும். இந்த வன்மம் காலம் காலமாக நட்ந்து வந்து இப்போது தான் குறைந்திருக்கிறது. வசை பாடுதல் என்கிறார்களே அது உண்மையாகவே பாடலாகவே அந்த காலத்தில் உலா வந்திருக்கலாம்.

மொட்ட பாப்பாத்தி….
முறுக்கு சுட்டாளாம்
எண்ணை பத்தலையாம்…
கடைக்கு போனாளாம்
காசு பத்தலையாம்…
கடைக்காரனைப் பார்த்து கண்ணடிச்சாளாம்..

ஒரு விதவையின் ஏழ்மை நிலையை கிண்டல் செய்யும் பாடல் ஒன்றுமறியாத குழந்தையாக இருந்த போது எனக்கு அறிமுகமானது. இப்போது கூட பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த பாடல் தெரிந்திருப்பது வேதனை.

வசை என்ற நிலை தாண்டி கெட்ட வார்த்தைகள் கிண்டலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் சொல்லப்படுவதை பற்றி பார்த்துவிட்டோம். சிலர் மகிழ்ச்சியாக இருக்கும் போது கெட்ட வார்த்தைகள் சொல்லுவார்கள். எங்கள் ஊரில் வக்காலோளி… பின்னிட்டான்டா என்று அதிகம் சொல்லப்படுவது கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் போது என்றால் நம்ப முடிகின்றதா?

ஒருவரை வசை பாடவும், கேலி செய்யவும் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் சொல்லப்படும் கெட்டவார்த்தைகளுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது பல கெட்ட வார்த்தைகள் தூய தமிழ் சொல் என்பது தான்.

தமிழ் படங்களில் கெட்டவார்த்தைகளின் புழக்கம் ஆரமித்து பல வருடங்கள் ஆகின்றன. நான் கடவுள் படத்தில் ஜெயமோகனின் வசனம் இயல்பாக இருந்ததற்கு கெட்டவார்த்தைகள் உறுதுணை நின்றன என்பது உண்மை. அதைப் பார்த்துவிட்டு ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்களில் அது திணிக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு நாகரீகம் நிறைந்த சூழலில் கூட ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் புழங்கப் பட்டுதான் வருகின்றன. வார்த்தைகள் வேண்டுமானால் மாறாலாம் ஆனால் காலத்தால் அழிக்கப்படாத ஒன்றாக கெட்டவார்த்தைகளும் மாறிப்போனதை இங்கு பதிவு செய்கிறேன்.

நன்றி: ஜெகதீஸ்வரன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.