உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது விளையாட்டு பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார்.
குளிக்கும் போது வடக்கு_அல்லது_கிழக்குதிசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
மேற்குதிசை நோக்கி நின்று குளித்தால்உடல் வலி வந்துசேரும்.
ஒவ்வொருவரும் தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் குளிப்பதற்கு முன்பாக முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் 'ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் 'இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. எனவே
தண்ணீரை கால் முதல் மேல்நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகின்ற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி, மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை பிரஷ்டம் என்பார்கள். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன்,
முதலில்_முதுகுபாகத்தைத்தான்_துடைக்க_வேண்டும். குளித்து முடித்ததும் உடலை சுத்தம் செய்ய, நம்மில் பலரும் ஈரம் படாத துண்டைத் தான் உபயோகிப்பார்கள். ஆனால் அது சரியல்ல...
குளிக்கும் நீரிலேயே துண்டை நனைத்துப் பிழிந்து துவட்டுவதுதான் உத்தமம். உலர்ந்த துணியானது, உள் சூட்டை வேகமாகப் பரவச் செய்து,பலவித உள் வலிகளை ஏற்படுத்தும்.
பிறருடன் வாய்திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளியல் நேரம். அந்த நேரத்தில் மவுனத்தை_கடைப்பிடிக்கவேண்டும். அல்லது மனதளவில் இறைவனின் ஜெபத்தை உச்சரிக்கலாம்.
பஞ்ச இந்திரியங்களால் செய்த தவறுகளினால், நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் குளிப்பதன் மூலமாக களையப்படுகிறது.
குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரைவைத்து குளித்தபின் துப்புவதால், கழுத்துக்கு மேல் வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல்நோக்கி_எழும்பும்_அக்னியின் வேகத்தை கட்டுப்படுத்தும்.
குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.
'நாரம்' என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால் ஓடிச் சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோக் கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்வதால், கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ் னம் திருஷ்டிதோஷங்களை அறுக்கும்.
குருவே துணை
அகத்தியர் குடில் அகத்தியர் குடில்