Positive Thinking வர என்ன செய்யலாம்?

positive-thinking
Positive Thinking வர என்ன செய்யலாம்?

நேர்மறை எண்ணம். எதையும் Negative ஆக யோசிக்காமல் இருப்பது. எண்ணங்களிலும் செயலிலும்
நேர்மை" என்றேன்.

இன்னும் விளக்கமாக? என்றார்.

யோசித்து யோசித்து ,என் அனுபவம், படித்தது இவற்றிலிருந்து Positive Thinking குறித்து அவருக்கு விளக்க முயற்சித்தது.

1) பறவையை பிடித்து கூட்டில் அடைப்பது விட, மரம் ஒன்று நட்டால் எண்ணற்ற பறவைகள் அங்கே கூடு கட்டுமே என்று செயலில் இறங்குதல்.

2) ஒருவருக்கு உதவும் போது பணம்
மட்டும் இல்லாமல் அவரே உழைத்து, வாழ்க்கையை நடத்த, ஏதேனும் வழி உள்ளதா? என்று யோசித்தல்

3) நம்மை மனதளவில் காயப்படுத்தியவர்களை, திருப்பி அடிக்காமல், புறந்தள்ளி விட்டு,
நாம் வெற்றி பெற
என்ன செய்ய வேண்டும்
என்று மட்டும் யோசித்தல்.

4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok. இதிலிருந்து என்ன அனுபவ பாடம்
கற்றோம் என்று யோசித்தல்.

5) வெற்றி மேல் வெற்றி வரும் போது ஆணவமாக என் முயற்சி என்று எண்ணாமல், இறைவனும் நம்மோடு பயணிக்கிறார் என்று அமைதி காத்தல்.

6) உடல் நலமில்லாத வரை காணும் போது அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்தல்

7) நம்மை சுற்றி இருப்போர், நமக்கு உதவுவோர், நம் நலம் நாடுவோர் அனைவரும் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்தல்.

தெருவில் செல்லும் போது நம்மை கடக்கும் ஆம்புலன்ஸ் நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் அனைவரும் நலம் பெற வாழ்த்துதல்.

9) ஹோட்டல், தெருவோர சிறுவியாபாரிகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், நம் தேவையை கவனித்தவர்களுக்கு புன்னகையோடு நன்றி சொல்லி அவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துதல்.

யோசித்தால் இன்னும் பல நிகழ்வுகள் வரும்.
இதனால் என்ன பயன்? என்றார் நண்பர்.

முதலில் உங்கள் மனதில் அமைதி, தன்னிறைவு, உங்களை சுற்றி நல்ல Aura உருவாகும். நல்லோர் நட்பை ஈர்ப்பீர்கள் தேவையற்ற வினைகளும் அகலும். வாழ்வே ஒரு புதிய கோணத்தில் இருக்கும்.