Breaking News :

Sunday, September 08
.

விநாயகருக்கு உகந்த 12 துதிகள்?


கல்வி, செல்வம் ஆகியவற்றுக்கு  அதிபதியான விநாயக பெருமானின்  முழு அருளை பெற  இந்த 12  துதிகளையும் துதித்தால்,   விநாயகப்பெருமானின் அருளை முழுமையாக  நாம்  அடையலாம்.

ஸ்லோகம் 1

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

ஸ்லோகம் 2

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 3

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம் 9

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்லோகம் 10

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

ஸ்லோகம் 12

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ

வென்றிடு! மனமே வென்றிடு! பயத்தை நீயே வென்றிடு! வெற்றி மீது வெற்றி கொள்ள! வைராக்கியதுடன் வென்றிடுகவே!

ஓம் விக்னேஷ்வரா போற்றி

 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.