Breaking News :

Thursday, December 05
.

கணபதி துதி...


அரியதொரு தோற்றமொடு அழகுநிறை பாலகனாய்,

ஒளிபொருந்திய கண்களொடு பெருவயிற்று ப் பேழையொடு,

கவலைகளை மறந்தேநின் திருமுகத்தைக் காணுவது,

பலபிறவிகளில் செய்புண்ணியமே கணபதி யே தொழுகின்றேன்..

 

பிறப்பிறப்பு சுழற்சியிலே சிக்கித்தவிக்கும் ஜீவனை, 

இனியொரு கருப்பைதனில் மீண்டும் சேர்க்காமல்,

உலகதனில் பிறக்காமல் வாழ்வருளும் கணேசனே,

நின்திருவடிகளைத் தொழுதோம் காத்திடுவா ய் குணசீலனே..

 

விசித்திர உடலழகை உருவமாய் பெற்றவனே,

நாகாப ரணத்தையே முப்புரியாய் அணிந்தவனே, 

தருவடியே திருப்பதியாய்க் கொண்டமர்ந்து இருப்பவனே, 

வருமடியார் துயர்தீர்ப்பாய் கற்பக விநாயகனே..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.