Breaking News :

Friday, October 11
.

வாஸ்து சாஸ்திரங்கள்


ஈசான மூலை

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.  ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.  பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.
பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

அக்னி மூலை

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.  வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.  அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

குபேர (வடக்கு)மூலை


செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை,  

நிருதி (தென்மேற்கு) மூலை


நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.

.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில்
அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான,
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.

வாயு மூலை


கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.
குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

நிருதியில் (தென்மேற்கில்)

படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் .தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

மையப் பகுதி


வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

 வாயிற்படி, அறைகளின் அளவு
வாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும்,

மனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என 8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.

தொழில் வாஸ்து

தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,

தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம், நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

வாஸ்து குறைகளைப்போக்கும் சிறுபரிகாரங்கள்.

 ஈசான மூலையில் ( வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.
வண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)
மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,
மாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.
இனிமையாக ஒலிக்கும் "வின்ட்செம்"களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்

நவக்கிரகங்களும் திசைகளும்

சுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும், 
செவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும், 
கேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும், 
புதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும், 
சந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும், 
ராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும், 
குருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும், 
சனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன. 
சூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.

 *ஜோதிடத்தில் நிறைய வழிகள் உள்ளன அவரவர் ஜாதகத்தில் ஸ்தானங்களூக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் பரிகாரங்கள் நிறையவே உள்ளன பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்*

*நம்புங்கள் நல்லதே நடக்கும்*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.