Breaking News :

Wednesday, March 19
.

வளர்பிறை சந்திர தரிசனம் செய்தால் பார்வை கோளாறு?


சந்திர தரிச னம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தி யாகும் ஏனெனில் சந்திரனுக் கும் ஆயுளுக்கு ம் நெருங்கிய தொடர்பு இருக் கிறது. நாளையதினம் வீட்டு மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம தரிசனம் பண்ணுங்க.

சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண் ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். வானத்தில் சில நொடிகளே காட்சிதரும் பிறைச் சந்திர தரிசன மே மிக அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.

சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திர னையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை தரிச னம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் திருமுடியை நாம் தரிசிக்கு ம் பாக்கியம் பெறுகிறோம். வளர்பிறை சந்திர னை தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் சந்திரபகவான் வளர்பிறையாக தனது பயண த்தை துவங்குகிறார். துவிதியை அன்று மாலை யில் சந்திரதரிசனம் என்று அழைக்கி றார்கள். பிறைச் சந்திரனை பார்த்தல் மனநி றைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

சந்திரனை தரிசன பலன்கள்

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணை வது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். சந்திரனே மனதிற்கு அதிபதி. சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

சந்திரனை வணங்கிய பலன்

சந்திர தரிசனம் செய்வ்து நோய்கள் நீங்கும் ஆயுள் விருத்தியாகும். சந்திரனுக்கும் ஆயுளு க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது.
எனவே ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆம் வீடுகளில் மறைவு பெற்றோ, விருச் சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி, ராகு, கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந் தோ இருந்தால் சந்திர தரிசனம் செய்து வணங்குவது தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

சந்திர தோஷம் இருக்கா

ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்த வர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணை ந்து தோஷம் அடைந்தவர்கள் ஆகியோர் மூன் றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

முற்பிறவி பாவம் போக்கும்

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர் கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவம் போக்கும் என்பார்கள். சந்திரனின் நட்சத்திர ங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தி ல் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.

பார்வை கோளாறுகள் நீங்கும்

சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்,

ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷ மும் தேடிவந்து அமையும். பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பார்வை கோளாறு கள் நீங்கும்.

மாங்கல்ய பலம் பெருகும்

சந்திரனை தரிசிக்கும் நேரத்தில் கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.இந்த  பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.