Breaking News :

Saturday, July 19
.

வைகாசி விசாகம் புராண கதை


சிவனின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர் கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.

‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.

சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை செய்ய பல பணியாளர்கள், தேவ லோகவாழ்வு என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள் அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி ஆயிற்று. இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில் பிரம்மதேவரும் கூட தப்பவில்லை.

பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவி த்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவுஅருகே காத்திருந்தனர் எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.

இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். 

அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்ம னுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந் து வரும் பார்வதி யின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல் லுங்கள்’ என்று கூறினார்.

அதன்படி பிரம்மதேவர் மன்மதனை அழைத் து, சிவபெருமான் மீது மன்மதஅம்பு தொடுக் கும் படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனி ன் கோபத்தை பற்றி தெரிந்திருந்ததால் பயந் துபோன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரி ன் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.

நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத் தான். அந்தஅம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றி கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்ப லாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.

அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித் து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மண ம் முடித்து கயிலாயம் திரும்பினார்.

தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா, இந்த உலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுர ர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.

தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும் பாத சிவபெருமான், தனது பழமை யான ஆறு திருமுகங்களையும் கொண் டார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாத ம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. 

சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய தீப்பொறிகள் வெளிக் கொணர் ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.

பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெருமான் உத்தர விட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். 

கங்கை, அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந் தை களாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின. ஆறுமுக பெரு மான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம்.

விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வான வர்களுக்கும், வையகத்தில் அனை வருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெரு மான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவபெரு மான், அம்பிகையுடன் சரவண பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப் பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர்களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்பனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.