Breaking News :

Friday, February 14
.

திருமண தோஷ பரிகாரம் என்ன?


ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

 சென்னைதிருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடியில் வீற்றிருக்கிறார் குரு பகவான். அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும் பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதஷணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

தேவதோஷம் பித்ரு தோஷம் சர்ப்ப தோஷம் திருஷ்டி தோஷம் பிரேத சாபம் அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. மாயவரமகுத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் திருமணஞ்சேரி இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடுமாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

 துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும். இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர்.

இயலாதவர்கள் துணைவியாருடன் சேர்ந்துள்ள நவக்கிரக படம் வாங்கி வழிபட்டு வரவும் விரைவில் திருமணம் நடைபெறும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.