Breaking News :

Wednesday, December 04
.

திருக்கடையூர் அபிராமி அம்மன்


அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வரு கிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர்  அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார். 

அவர் ஸ்ரீவித்யை உபாசனையில் ஈடுபட்டு பரா சக்தியையே எப்போதும் பூஜித்து தன் நினைவு இன்றி இருந்து வந்தார் அப்போ து தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் தன் பரிவாரங்களுடன் திருக்கடையூர் வந்திருந்தார். 

அன்று தை அமாவாசை. நேர்த்திக் கடன்க ளை நிறைவேற்றிய பின்னர், மன்னர் பட்டரைப் பார்த்து விட்டு, அங்கிருந்தவர்க ளிடம் "யார் இவர்?'' என்று கேட்கிறார்.  "இவர் ஒரு பித்தர், ஒரு துர்தேவதையை உபாசித்து எப்போதும் இப்படியே மெய் மறந்து கிடக்கிறார்'' என்றனர்.

மன்னர் அவரைப் பரிசோதிக்க எண்ணி, "இன்று என்ன திதி?''என்று கேட்கிறார். முழு நிலவுபோல் ஒளிவீசிய அன்னையின்  முக வதனம் கண்டு பட்டர் "இன்று பெளர்ணமி திதி!'' என்கிறார்.

மன்னர், "இன்று நிலவு உதயமாகவில்லை எனில், உனக்கு மரண தண்டனை!'' என்று அறிவித்து விடுகிறார்.

"தாயே, உன் நினைவில் ஆழ்ந்தே நான் இன்று பெளர்ணமி என்றேன். நீயே என்னை காப்பா ற்ற வேண்டும்!'' என்று பட்டர் அம்பாளைப் பிரார்த்தனை செய்து, ஆழமாய் ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். மேலே ஒரு விட்டமும், அதில் நூறு கயிறுகளால் உறி யையும் கட்டினார். அதில் அமர்ந்து அம்பி கை மேல் அந்தாதி பாட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு பாடலாய் பாடப்பாட ஒவ்வொரு கயிறாய் அறுத்துக் கொண்டே வந்தார்.

எழுபத்தி ஒன்பதாவது பாடலான "விழிக்கே அருளுண்டு...' என்ற பாடலைப் பாடும்போது அம்பிகை தோன்றுகிறாள். அவள் காது  தாடங்கம் ஒன்றைக்  கழற்றி வானில் எறிய, நிலவாகப் பிரகாசிக்கிறது. மன்னர் பிரமித்து, மகிழ்ந்து பட்டரைப் போற்றி, அவருக்கு இறை யிலியாக நிலங்கள் அளிக்கிறார்.

அம்பிகையின் உத்தரவின் பேரில் சுப்ரம ணிய பட்டர் நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடி மகிழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் 'அபிராமி அந்தாதி' ப் பாடல்கள் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன.

🌹திருக்கடையூர் பல விதங்களில் சிறப்புப் பெற்ற தலம்.

பிரம்மா சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற விரும்பி வழிபட்டார். அப்போது ஈசன் சில வில்வ விதைகளைத் தந்து, "இது எங்கே முளைவிடுகிறதோ அங்கு உனக்கு ஞானம் கிடைக்கும்' என்கிறார். 

அதேபோல் பிரம்மா பல இடங்களில் நட்டும் விதை முளைக்கவில்லை. முடிவில் திருக்கடையூரில் வில்வ விதைகள் முளைவிட இத்தலம் "வில்வவனம்' என அழைக்கப்பட்டது.

பாற்கடலைக் கடைந்த பின் தேவர்களுக்கு அமிர்தத்தை பரிமாறும் முன் ஈசனை வணங்க விரும்பி மகாவிஷ்ணு தன் ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து தோன்றியவ ள் அபிராமி அம்மை என்கிறது புராணங்கள். விநாயக ரை வணங்காமல் தேவர்கள் அமிர்த த்தை உண்ணச் சென்றதால் விநாயகர் அந்தக் கலசத்தை மறைத்து விட்டார். 

அதன்பின் அவரை வணங்கி தேவர்கள் கலச த்தைத் திரும்பப் பெற்றுச் செல்லும் போது நதிக்கரையில் குடத்தை வைத்து விட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. எனவே தான் இத்தலம் "திருக்கடவூர்' எனப்படுகிறது.

மிருகண்டு முனிவர் மருத்துவதி தம்பதிய ரு க்கு குழந்தை பேறு இல்லை. சிவபெரு மானை நோக்கித் தவம் இருந்தவர்கள் முன் இறைவன் தோன்றி, "ஆயிரம் வருட ங்கள் வாழும் துர் நட த்தையுள்ள புத்திரன் வேண்டுமா? பதினாறு வருடமே வாழும் சத் புத்திரன் வேண்டுமா?' என கேட்கிறார். 

இதுவும் அவன் லீலைதானே. ஈசனின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை முனிவரு க்கு. "சத்புத்திரன் வேண்டும்!' என கேட்க மார்க்கண்டேயன் பிறக்கிறார் ஈசனின் நாம த்தை ஜெபித்தபடி, தலை சிறந்த அறிவாளியாகவும் சிவபக்தராக வும் இருந்தவர் ஒவ்வொரு தலமாக இறை வனைத் தரிசித்து கொண்டு, வரும்போது திருக்கடவூர் வருகிறார். அங்கு அவர் ஆயுள் முடியும் நேரம்.

🌹எமன் பாசக் கயிறுடன் வருகிறான்.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆரத் தழுவி கொள்கிறார். ஈசன் எமனை சம்ஹாரம் செய்கி றார். எனவே கால சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகி றார். ஈசனின் பாசக்கயிறு பட்டதால் லிங்க த்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகிறது. வருடத் திற்கு 11 முறை மட்டுமே இவருக்கு அபிஷே கம் நடைபெறுகிறது.

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய மார்க்கண்டேய ன் காசியிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார். அவரின் சிரமத்தைப் போக்க ஈசன் மயான பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே உள்ள கிணற்றில் கங்கை தீர்த்தத்தைத் பொங்கச் செய்தார். அப்போது "பிஞ்சலம்' எனப்படும் ஜாதி முல்லையும் உடன் வந்ததால், இங்கு தல விருட்சமாக ஜாதி முல்லையும் இருக்கிற து. இறைவனுக்கு மட்டுமே இதன் மலர் அணிவிக்கப்படுகிறது.

இறைவன் மேற்கு நோக்கியும், அம்பிகை கிழக்கு நோக்கி தன் பதியைப் பார்த்தபடி நிற்பதால் இது நித்தியக் கல்யாணத் தல மாக விளங்குகிறது. அன்னை பளபளக்கு ம் பட்டாடை ஆபரணங்கள் அணிந்து கண் குளிர, மெய் சிலிர்க்கக் காட்சி தருகிறாள். 

இங்கு நவகிரகங்களுக்கு சக்தி இல்லை; என வே அவர்களுக்கு சந்நிதி இல்லை. பாம்பாட்டி சித்தர் பூஜித்த இடம். வெளிப் பிரகாரத்தில் ஐம்பத்து நான்கு கல்வெட்டு கள் உள்ளன. முதலாம் மற்றும் மூன்றாம் ராஜராஜன் கோயி லுக்கு செய்த திருப்ப ணிகள் அளித்த கொடை கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

அதேபோல் சுந்தர பாண்டியன், வீர பாண் டிய ன், திருமலை நாயக்கர், கிருஷ்ண தேவராய ரின் கொடைகள் பற்றிய குறிப்பு களும் காணப் படுகின்றன.

இங்கு அறுபது, எண்பது, உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி போன்ற திருமணங்கள் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் இங்கு திரும ணம் செய்து கொண்டால் நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள்.  

"ஆதிசக்தி, ரமேயாதமா, பரமா, பாவனாக்ருதி
அநேககோடி பிரம்மாண்ட ஜனனீ திவ்ய விக்ரஹா...''

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். 

அழுக்கு, பிணி என்று நிரம்பிய இந்த உட லை நம் கர்ம வினைகளின் காரணமாகப் பெறுகி றோம். இந்த நோயிலிருந்து விடு பட அவளை தியானிப்பதே வழி. அபிராமி அம்மையைப் பூஜித்தால் சகல விதமான நோய்களிலிருந்து ம் விடுபட முடியும். இங்கு "சப்த திரவிய ம்ருத் யுஞ்ஜெய ஹோமம்' செய்தால் இதய நோயிலி ருந்து விடுபடலாம்.

இங்கு அன்னைபார்வதி.முருகனை வலது தொடையில் அமர்த்தி குகாம்பிகையாக இருக்கிறாள். அவளை வணங்கினால் குழந்தைப் பேறு, மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

"மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே 
பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே'

என்று.பாடுகிறார் அபிராமி பட்டர். அபிராமி அந்தாதியில் அனைத்துப் பாடல் களையும் படிக்க முடியவில்லை என்றாலு ம் நூற்பயனை ப் படித்தாலே போதும் என்கிறார்கள்.

"ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே' 

ஆம், அவளைத் தொழுதால் போதும், சகல செளபாக்கியங்களையும் தருவாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.