எங்கள் ஆலயத்தில் சுவாமிக்கு இரட்டை வாழை இலை போட்டு படையல் இடுவார்கள். தெய்வங்களுக்கு இரட்டை வாழை போட்டுத்தான் நைவேத்தியம் பரிமாற வேண்டுமா?
தெய்வங்களுக்கு நம்மால் இயன்றதை படைப்பது நமது மரபு. 2, 4, 6 என்ற கணக்கில் இரட்டைப்படை அளவில் வெற்றிலையும், பாக்கும் வைக்க வேண்டும். பாக்கு பொட்டல மாக இருப்பின், பிரித்து இருத்தல் அவசியம்.
முக்கியமாக வெற்றிலையின் நுனி, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கவேண்டும். காம்பு பகுதியானது தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கவேண்டும்.
முக்கியமாக வாழைப்பழம் அல்லது வாழை இலை ஆகியவற்றின் நுனியானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும், காம்பு பகுதியானது தெற்கு அல்லது மேற்கு நோக்கியும் இருக்குமாறு வைத்தல் வேண்டும்.
அதேபோல் கடவுளுக்குப் படைக்கும்போதும் ஓர் இலையிலோ, இரட்டை வாழை இலைகளிலோ சமர்ப்பிக்கலாம். அந்தந்த ஆலயத்தில் உள்ள மரபை அறிந்து செயல்படுவது சிறப்பு.