Breaking News :

Friday, October 04
.

தேய்பிறை சஷ்டி விரதம் ஏன்?


முருகப்பெருமானை தினமும் ஒருவர் பூஜை செய்து வந்தார். 

 

அவர்எப்போதும் முருகன் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டும், சஷ்டி நாளில் விரதமும் இருப்பார். திருமணமாகி ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் வாடிய அவருக்கு முருக னின் அருளால்  மகன் பிறந்தான். இதனால் குழந்தைக்கு ‘கந்தவேலன்’ என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். 

 

கந்தவேலனும் தன்னைப்போல் முருகனின் பக்தனாக வரவேண்டும் என எண்ணினார்.

முருகனின் கதைகள், அடியார்களின் வாழ்க் கை வரலாற்றை கந்தவேலனுக்கு சொல்லிக் கொடுத்தார் தந்தை. 

 

இதனால்  கந்தவேலனின் மனதில் முருகனது நாமம் ஒலித்துக் கொண்டே இருந்தது. படிப் பை முடித்ததும், முழுநேரமும் முருகனுக்கே பணி செய்ய முடிவெடுத்தான். பக்தியோடு சேவை செய்தால், நக்கீரர், அருணகிரியார் போல தனக்கும் முருகன் காட்சி தருவார் என்று பரிபூரணமாக நம்பினான்.

 

சஷ்டி, கார்த்திகை நாளில் விரதம் இருந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தான் இப்படி வருடங்கள் ஓடின. ஆனாலும் முருகனி ன் காட்சி அவனுக்கு கிடைக்கவே இல்லை. இதனால் மனதில் முருகனை காணமுடியவி ல்லையே என்ற வருத்தம் தலைவிரித்து ஆடியது.

 

தினமும் கோயிலுக்கு வரும் கந்தவேலன் கண்ணீர் வடித்து, ‘‘முருகா! உன்னையே நினைத்து உருகிக்கொண்டிருக்கும் எனக்கு காட்சி தருவாயா? அருள் செய்’’ என்று வேண்டி நின்றான்.  

 

அவனது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய முருகன் காட்சி தர எண்ணம் கொண்டார்.

அன்று வைகாசி விசாகம்! பக்தர்கள் அன்ன தான மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். 

 

அப்போதுதான் அவனுக்கு அந்த அற்புதக் காட்சி கிடைத்தது. ஆம்! சன்னிதியில் நின்ற வன்முன், முருகன் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் காட்சிதந்தார். பக்திப் பரவச த்தில் திளைத்தான் அவன். அதே நேரத்தில் அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் விரைவி ல் உணவிடும்படி சப்தமிட்டது அவனது காதில் விழுந்தது. அதைக் கேட்டு படபடத்தான். 

 

‘‘முருகா! எத்தனையோ நாட்கள் கழித்து  நீ காட்சி தந்திருக்கிறாய். உன் பேரழகை ஆயுள் முழுவதும் தரிசித்து கொண்டிருக்கலாம். ஆனால் வந்தவர்களை காக்க வைத்து விட்டு, உன் முன்னால் அமர்ந்திருப்பது முறையல்ல. இதோ ஒரு நிமிடம்! உணவு பரிமாறி விட்டு வந்து விடுகிறேன்’’ எனச் சொல்லி பதிலுக்கு க் காத்திருக்காமல் விரைந்து சென்றான்.

 

பேச்சுக்கு ஒரு நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லலாமே தவிர ஆயிரம் பேருக்கு அன்ன ம் போடுவதென்றால் சாதாரண விஷயமா? 4 மணி நேரம் கடந்து விட்டது. எல்லா வேலையு ம் முடிந்த பின் சன்னிதி திரும்பினான். 

 

அவனது மனதில்  ‘நம்மை தேடிவந்து காட்சி கொடுத்த முருகனை அலட்சியப்படுத்திவிட்டு எனது வேலையை பார்க்க சென்று விட்டேனே முருகன் அங்கு நிற்பாரா’ என்று சந்தேகம் குடிகொண்டது.

 

முருகன் சன்னிதி நோக்கி ஓடினான். என்ன ஆச்சரியம்! முருகன் தன் பக்தனுக்காக அங்கேயே காத்திருந்தார்..அவன் வியந்து நின்றான். தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டி முருகனின் திருப்பாதங்களில் விழுந்தான்.

 

‘‘கந்தவேலா! வருந்தாதே. எனக்கு செய்யும் பூஜையை விட அடியார்களுக்கு அமுது அளிக் கும் உன் பணியில் இருந்த கடமையுணர்வின் முன் நான் நிற்பது ஒன்றும் பெரிதல்ல. உன் கடமையை எப்போதும் சரியாகச் செய்! அப்படி உன் பணிகளை சரியாக செய்தாலே போதும். அது என்னை வணங்குவதற்கு சமம்.’’ எனச் சொல்லி ஆசி அளித்தார்.

 

‘நம் மூச்சு உள்ள வரை நமது கடமையைச் சரியாக செய்ய வேண்டும்’ என்பதே முருகனிடம் பெற வேண்டிய வரமாகும்.  

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.