Breaking News :

Tuesday, May 21
.

தாலி பலம் தரும் தை மாத வெள்ளி பூஜை


தை வெள்ளிக்கிழமை நாளில், பெண் தெய்வ வழிபாடு நற்பலன்களை வழங்கும். நம் குடும்பத்தைத் தழைக்கச் செய்யும். அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் வாழையடிவாழையென தழைக்கச் செய்வாள் தேவி.

செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், சக்தி என்று போற்றி வணங்கப்படுகிற அம்மன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை. தை வெள்ளிக்கிழமையில், தவறாமல், வீட்டைத் தூய்மைப்படுத்தி, அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவது, மனதில் தெளிவையும் செய்யும் தொழிலில் மேன்மையையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

தை மாத வெள்ளிக்கிழமை நாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். குறிப்பாக, செவ்வரளி மாலை சார்த்துங்கள்.

அடுத்த  தை வெள்ளிக்கிழமை. .   கடைசி வெள்ளிக்கிழமையும் மறக்காமல், அம்பிகையை தரிசிப்போம். அவளை ஆராதிப்போம்.

முக்கியமாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் (காலை 10.30 முதல் 12 மணி வரை) அம்மன் கோயிலுக்கு அல்லது அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவோம். சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளுவாள் தேவி என்கிறது தேவி மகாத்மியம். எனவே வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்கை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவோம்

தை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்மனை வணங்கினால் குலம் தழைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.

    தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

 அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத முதல் வெள்ளிக்கிழமை இன்று மஹிஷாசுர மர்த்தினியையும், ப்ரத்யங்கிரா தேவியையும் வழிபடும் விதமாக 1000 மஞ்சள் கிழங்கு கொண்டு மாபெரும் துர்கா யாகம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தெய்வங்களை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் பல சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள்.

தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை. தை முதல் வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு.  

தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!  

தை மாதத்தின் வெள்ளிக் கிழமையான இன்று வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும். மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்க வேண்டியும் சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும் விதத்திலும், குடும்பத்தில் மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறவும் அன்னை பராசக்தியை வேண்டி நடைபெறும் யாகங்களில் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களிலிருந்தும், வேலூர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, ப்ரத்யங்கிரா தேவியையும், நவகன்னியையும், மஹிஷாசுர மர்த்தினியையும் பிரார்த்தனை செய்து, மிளகாய் வற்றல், நவதான்னியங்கள், வேப்ப எண்ணெய், மஞ்சள் போன்ற பொருட்களை யாக குண்டத்தில் சேர்த்து, அம்பாளை வணங்கி மாங்கல்ய சரடு, திருஷ்டி கயிறு போன்ற பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தை செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கும், அஷ்ட பைரவருக்கும், காலபைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .

திருவிளக்கு பஜனை இதோ..

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்
இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்
மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே .
காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்
திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்
அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே ஆனந்த நர்த்தினி திருவிளக்கே
ஆலய பூஷணி திருவிளக்கே ஆதிபராசக்தி நமஸ்காரம்
பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே பக்தியை அளித்திடும் திருவிளக்கே
பதவியைத் தந்திடும் திருவிளக்கே பவானி உனக்கு நமஸ்காரம்
ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே
அழகை அளிக்கும் திருவிளக்கே அம்மா உனக்கு நமஸ்காரம்
சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே சக்தியே உனக்கு நமஸ்காரம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.