Breaking News :

Wednesday, December 04
.

நீங்கள் செய்யும் தானம் என்னாகும்?


மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.*

*அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.*

*அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.*

*ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.*

*எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.*

*காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும்.* *குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.*

*காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.*

*தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.*

*குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.*

*தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.

*நெய் தானம் – வீடுபேறு* *அடையலாம்-தேவதா அனுக்ரஹம்*

*தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.*

*கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன* *பயநிவர்த்தி*

*பால் தானம் –* *சவுபாக்கியம்*

*பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர* *அபிவிருத்தி*

*தயிர் சாதம் / பால்* *சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.*

*தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.*

*வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.*

*சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்*

*பூமி தானம் – இகபரசுகங்கள்*

*வஸ்த்ர தானம்* *(துணி) – சகல* *ரோக நிவர்த்தி*

*கோ தானம்* *(பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.*

*திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்*

*குல தானம் (வெல்லம்) – குல* *அபிவிருத்தி – துக்கநிவர்த்தி*

*சந்தனக்கட்டை* *தானம் – புகழ்*

*விதை தானம் –* *வம்ச விருத்தியை* *தரும்*

*மாங்கல்ய சரடு* *தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.*

*பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.*

*தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும்.* *பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.*

*தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.*

*பூரணநலன் உண்டாக்கும்.* *நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.*
*தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.*

*அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.*

*அத்தகைய தானங்கள் பல வகைப்படும்.*

*கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள்* *என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்* *என்பதைத் தெரிந்து கொள்வோம்.*

*அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.*

*கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.*

*பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம்* *வைகுண்ட வாசம் உண்டு.*

*குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.*

*தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.*

*வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.*

*ஆலயத்துக்கு யானை தானம் –* *இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.*

*குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.*

*நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –* *வாயுலோகத்தில் வாழ்வார்.*

*தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.*

*பயன் கருதாது தானம் – மரணம்* *உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.*

*பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.*

*தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் –* *நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.*

*சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.*

*தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.*

*நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.*

*தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

*தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.