Breaking News :

Tuesday, May 21
.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், திருநாகேஸ்வரம்,


செம்பியவரம்பல், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், திருநாகேஸ்வரம், அய்யாவடி அருகில், கும்பகோணம் வட்டம்,தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

இக்கோயிலின் தல வரலாறு

சிதம்பரத்தில் சொர்ணபைரவர், செம்பியவரம்பல் கிராமத்தில் உமாமகேஸ்வர, கல்யாண சுந்தரேஸ்வர ரூபத்தில்,பைரவி உடனுறை ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவராக திகழ்கிறார்.

வலது பின்கரம் குபேர கலசமும், இடது முன்கரத்தில் அம்பிகையை அனைத்தபடி ஆலிங்கன கோலம், சொர்ண பைரவியும் வலது கரத்தை இறைவனின் வலது தோளில் வைத்து அனைத்தபடி ஈசனின் இடது தொடையில் அமர்ந்த கோலம்.
இடது பின்கரத்தில் நாகடமருகம், இடது தோளில் முத்தலை சூலம் சாய்ந்தவாறு, வலது முன்கரத்தால் அபயம் அருள்கிறேன் என நம்மைக்கண்டு புன்முறுவலுடன் சுகாசனத்தில் காட்சி தருகிறார்.

எண்திசை பைரவர்களுக்கும் உரிய வாகனத்துடன் நின்ற திகம்பரகோலம், சமபாத அளவில் நில்லாமல், நம்மைக்காத்தருள இருக்கிறேன் என ஒரு பாதத்தை மட்டும் முன் வைத்து நின்ற கோலம்.

நம் சொர்ணாகர்ஷன பைரவரிடம் மனமுருகி ஒருமனதாக உள்ளன்போடு வேண்டிடின், நினைப்பது நடக்கும் கேட்பது கிடைக்கும்.

அட்ட பைரவர்:

1. கல்வி, கலையை, அதன் மூலமாக வாழ்வாதாரம் தரக்கூடிய அஸிதாங்க பைரவர்.
2. கஜகேசரி யோகத்தையும், அரசு உத்தியோகத்தையும் தரக்கூடிய ருரு பைரவர்.
3. சத்ரு நாசகராகவும், வம்ச அபிவிருத்தியும் தரக்கூடிய சண்ட பைரவர்.
4. வெள்ளிக் கிழமைக்குரிய செல்வ செழிப்பினை, அதன் மேன்மையை தரக்கூடிய குரோதனர்.
5. பில்லி, சூன்யம், ஏவல்களை அழித்து வராகியின் கணவராக விளங்கும் உன்மத்தர்.
6. பிட்சாடணராக காசிக்கு வந்து அன்னபூரணியால் பிரம்ம கபாலம் நீங்கப்பெற்று அதுமுதல் காசியையே தனது இருப்பிடமாக கொண்டே நமக்கு தேஜசை தரும் கபால பைரவர்.
7. வம்பு வழக்குகளில் வெற்றியையும், சொந்தங்களிடையே வந்த சொத்து தகராரைப் போக்கியும் ஒற்றுமையைத்தர வல்லவராக பீஷ்ண பைரவர்.
8. பத்துவித ஆயுதங்களை பத்துக்கரங்களில் கொண்டு, ஈசான பாகத்தின் இறைவனாக, 'ஞமிலி' எனும் நாய் வாகனம் கொண்டு அஷ்டமி என்ற திதிக்கு உரியவராகவும் அஷ்ட ஐஸ்வர்யங்களை தரக்கூடியவராகவும், வாழ்வின் முக்தி நிலையில் அமைதியான ஆனந்தத்தையும் தந்து அருள்பவராகவும் விளங்குபவர் ஸ்ரீ சம்ஹார பைரவராவார்.

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணா கர்ஷண பைரவாய
தன தான்ய விருத்திகராய- சீக்கிரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வஸ்யம் குரு குரு நமஹ
திரு.T.S.பரமேஸ்வர குருக்கள்
செம்பியவரம்பல்
தொடர்புக்கு: 6369232784 , 9159758278

அஷ்ட பைரவர்கள்
அஸிதாங்க பைரவர்

சப்த கன்னிகைளில் முதல் தேவி ப்ராம்மி, கணவரான அசிதாங்கர், பிரம்ஹ தோற்றத்தில் அருள் பாலிக்கின்றார். கிழக்கு திசைக்கு உரியவராக அன்ன பட்சி வாகனம் கொண்டு சாந்தம் தவழும் முகத்துடன் பொன்னிற தோற்றம் கொண்டு காட்சி தருகிறார்.

காசி கரையில் விருத்த காலேஸ்வரம் எனும் கோயில் இருந்தும் தமிழகத்தில் திருக்கண்டியூர் மற்றும் சீர்காழியில் இருந்தும் அருள்பாலிக்கிறார்
இவரது நான்கு கரங்களில் பின் இரண்டினில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் கொண்டு பிரம்மர் போல் இருப்பார் என்பதால் கல்வி ,கலை இவற்றின் அதிபதியாக அருளக் கூடியவர்.

தனது விரல் நுனியினால் தட்சனின் யாகத்தில் போதினில் பிரம்மனின் ஐந்தாம் தலையை ஈசன் கொய்தமை கண்டு கோபமுற்ற பிரம்மன் இக்கலியுக பிறப்பின் ஆரம்பத்தில் சிலகாலம் படைப்புத் தொழிலை விடுத்தேன் என ஓய்வெடுத்தான்.
அவ்வேளையில் அசிதாங்கர் படைப்புத் தொழிலையும் ஏற்றார். அவ்வாறு இருக்கையில் பிரம்மனின் படைப்புத் சூத்திரத்தை அறியாத மையால் ஈசனின் படைப்பு எல்லாம் மூன்றாம் பாலினம் ஆகவே இருந்தது. ஆணுக்கு உள்ளே பெண்ணை வைத்தும் பெண்ணுக்குள்ளே ஆணை வைத்தும் பதைத்து பின்னர் தவறு கண்டு இனி நமக்கு படைப்புத் தொழிலை வேண்டாமென பிரம்மனிடம் திரும்ப படைப்பினை கொடுத்து வைத்தான்.

காயத்ரீ:
" ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி தந்நோ
அசிதாங்க பைரவ ப்ரசோதயாத் "

ருரு பைரவர்:

சப்த கன்னிகையில் இரண்டாம் தேவி மாஹேஸ்வரி, கணவராக ருரு பைரவர் ரிஷபாரூடராக காட்சி தருகிறார். தென்கிழக்கு திசை எனப்படும் அக்னி பகவானின் திசையின் நாயகர் புன்சிரிப்பு முகத்துடன் பொன்னிற மேனியுடன் ஆனந்த ரூபியாக காட்சி தருகிறார்.

காசி கரையில் 'அனுமன் காட்' எனும் கோயிலிலும் தமிழகத்தில் திருமருகல் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ளார்.

இவரது நான்கு கரங்களில் பின்னிரு கைகளில் மானும் மழுவும் கொண்டு குரு தட்சணாமூர்த்தி ரூபத்தில் அருள்பாலிக்கிறார்.

அரசு உத்தியோகம் தரும் இந்த ருரு பைரவர் தான் அரசாங்கத்தை ஆளும் ராஜ்ய பரிபாலன யோகத்தையும் தரவல்லவர்.

ஜாதக அமைப்பில் விபரீத ஜாதக யோகம் குருமங்கள யோகம் மற்றொன்று கஜகேசரியோகம் வியாழக்கிழமை தோறும் சுக்கிர ஓரை காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை அந்த நேரத்தில் கல்லாப்பெட்டியில் முன் சம்பாதித்த ஒரு பணத்தை அவ்வேளையில் வைத்திட அந்த சேமிப்பு கஜகேசரி யோகத்தை தந்திடும்.

காயத்ரீ:
" ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி தந்நோ
ருரு பைரவ ப்ரசோதயாத் "

சண்ட பைரவர்
சப்த கன்னி கையில் மூன்றாம் தேவி கௌமாரி கணவராக சண்ட பைரவர் மயூர வாகனராக திகம்பர கோலத்தில் காட்சி தருகிறார் இவருடைய திசை தெற்கு எனப்படும் எமனுடைய திசையாகும்.

வெண் புகை நிற மேனியை கொண்டவர் சாந்தம் தவழும் முக அமைப்பினை உடையவர்.

காசியில் துர்கா மந்திர் எனும் கோவிலுக்கு உடையவர் தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவில் என்னும் தலத்தை கொண்டவர்.

இவரது நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் வில் அம்பு கொண்டுள்ளார் இவரது ரூபம் சுப்பிரமணிய ரூப மாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்திற்கு உரியவர் ஆகையினால் வம்ச அபிவிருத்திக்காரகன் எனப்படுவான் மேலும் சத்ரு நாசகராகவும் விளங்கி எதிரிகளை அதிவிரைவில் அழிப்பவராகவும் விளங்கி அருள்பாலிக்கிறார்.

காயத்ரீ
" ஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹே
மகா வீராய தீமஹி தந்நோ
சண்ட பைரவ ப்ரசோதயாத் "

குரோதன பைரவர்

சப்த கன்னிகைகளில் நான்காம் தேவி வைஷ்ணவி கணவராக குரோதன பைரவர் கருட கொண்ட திகம்பரர் கையினில் சங்கு சக்கரம் கதாயுதம் பான பாத்திரம் கொண்டு விளக்குகிறார்.

லட்சுமி கடாட்சம் விளங்கும் சாந்த ரூபம் கொண்டு சாம்பல் வண்ண மேனியுடன் பக்ஷிராஜன் எனப்படும் கருட வாகனானக அருள்பாலிக்கிறார்.

ந்ருதி எனப்படும் தென்மேற்கு மூலைகுரிய குரோதனர் காமாட்சா எனும் காசி புரியில் இருப்பவர் தமிழகத்தில் திருநறையூர் மற்றும் திருநள்ளாற்றில் இருந்து அருள்பவர்.

தன்னை விட்டுப் பிரிந்த மகாலட்சுமி மகாராஷ்டிரம் சென்று தனியாக ஒரு மலை எடுத்து அமர்ந்த பிறகு குபேரனிடம் கடன் பெற்று பத்மாவதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் குபேரன் வந்து தன்னிடம் கடனை திருப்பித் தரும்படி வேண்டிய போது அதனை திரும்ப செலுத்த இயலாது போன விஷ்ணு எம்பெருமான், அவ்விடம் விட்டு ஓடி வந்து குடந்தை சாரங்கபாணி திருக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் ஒரு பாதாள அறையில் தன்னைத்தானே தாழ்ட்டு கொண்டு மறைந்து இருந்த வேலையில் காத்தல் தொழில் நின்று போக அந்த நேரத்தில் விஷ்ணு கோலம் கொண்டு காத்தலை செய்த ஈசன் குரோதன பைரவர் ஆவார்.

அதனால்தான் இன்றைக்கும் கடன் கொடுத்தவர் அலைந்து கொண்டிருக்க கடமை பெற்றவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் சொந்தங்களே என்றாலும் கடனை இல்லை என்று சொல்லிவிடின் இழிவில்லை.

காயத்ரீ
" ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி தந்நோ
குரோதன பைரவ ப்ரசோதயாத் "

உந்மத்த பைரவர்

சப்த கன்னிகைகளில் ஐந்தாவது தேவி வாராஹி கணவராக உன்மத்த பைரவர் வெள்ளை குதிரை வாகனம் கொண்ட திகம்பர கோலத்தில் அருள்பவர்.
வருணானுக்குரிய மேற்கு திசையில் ஹேம வர்ணம் எனப்படும் வெளிர் மஞ்சள் நிற மேனியுடன் மந்திர பலம் தரக்கூடிய மௌனம் கொண்ட நிலையில் நமக்கு அருள்பாலிக்கிறார்.

காசி கரையில் தேவரா எனும் பகுதிக்கு உரியவர் தமிழகத்தின் திருவீழிமிழலை எனும் ஊரில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.

முன் வலது கையில் இரும்பு உலக்கை கொண்ட இவரின் தேவி வராஹி தான் இக்கலியுகத்தில் உள்ள பில்லி சூனியம் ஏவல் போன்றவைகளை நீக்கபவனாக திகழ்கிறார். ஆனால் தேவியின் முகப்பு கருதி அவனால் பேச இயலாத நிலையில், கணவராக விளங்கும் உந்மத்த பைரவரும் பேசா நிலையில் நின்று அருள்பாலிக்கிறார்.

அம்பிகையின் அமைக்கின்ற பிரார்த்தனைகளை மௌனமாக நின்று மனோ வேகத்துடன் வேகமாக செல்லும் குதிரையில் சென்று உந்மத்தர் போக்குகிறார்.
ஒரு சபைதனில் சிலசமயங்களில் நல்லவற்றை பேசினாள் வெற்றியுண்டு சிலசமயங்களில் தீயவற்றை பேசியிருந்தால் இரட்டிப்பு வெற்றி உண்டாகும்.
மந்திரங்கள் சித்து வேலைகள் சித்திக்க ஞாயிறு கிழமைகளில் இவரை நாடிட நல்லதொரு நிலையினை அடையலாம்.

காயத்ரீ
" ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி தந்நோ
உந்மத்த பைரவ ப்ரசோதயாத் "

கபால பைரவர்

சப்த கன்னிகைகளில் ஆறாம் தேவி இந்திராணி எனும் மாஹேந்திரி, கணவராக கபால பைரவர் வெள்ளை யானையுடன் திகம்பராக வடமேற்கு எனும் வாயு மூலைகுரியவராவர்.

தன் இருப்பின் கரங்களில் பாசமங்குசம் மற்றும் வக்ராயுதம் கொண்டு மஞ்சள் நிற மேனியுடன் ரௌத்திர வடிவுடன் அருள்பாலிக்கிறார்.

காசி புரியில் லட்கஞ்ச் எனும் இடத்தில் குடிகொண்ட கபாலர், தமிழகத்தில் திருவிற்குடி, திருபூந்துருத்தி எனும் இடங்களிலிருந்து அருள் வழங்குகிறார்.

தட்சணணின் யாகத்தில் பிரம்மனின் கொய்யப்பட்ட ஐந்தாம் தலையுடன் கபாலம் ஒட்டிய கையினில் பிட்சாடனர் ரூபம் கொண்டு காசி கரையில் அன்னபூரணி சத்திரத்தில் தங்கக் கரண்டியினால் அடிவாங்கி கபாலம் நீங்கப்பெற்றிடினும் காசியே தனது இருப்பிடமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் காலபைரவர் காசி கரைதனிலேயே தங்கி விடினும்
நிறைவற்ற செல்வ வளங்களை அருள் தந்திட வேண்டி இந்திரனின் கோலத்தில் கபால பைரவராக நம்மை காத்திடும் பைரவராக காத்தருள் புரிகின்றார்.

காயத்ரீ
" ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி தந்நோ
கபால பைரவ ப்ரசோதயாத் "

பீஷ்ண பைரவர்

சப்தகன்னியின் கடைசி ஏழாம் தேதி சாமுண்டா கணவராக பீஷ்ண பைரவர் வடக்கு எனும் குபேர மூலையில் இருந்து அருள்பாலிக்கிறார்.
இவரது வாகனமாக சிம்மம் குறிக்கப்பட்டாலும் உத்திர பூமியில் பிரேத வாகனம் கொண்டு காட்சியளிக்கிறார்.

நீலோத்பலம் எனும் அல்லிப்பூவை கையில் கொண்டவர்க கருப்பு மேக வர்ணம் கொண்ட சாந்தம் தவழும் திகம்பரர் ஆவார்.

காசி புரியில் காசி பூரா எனும் இடத்திலும் தமிழகத்தில் பிரான்மலை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய தலங்களுக்குரியவர்.

பிஷ்ணம் எனில் குறைவில்லாதது என பொருளாகும்.

சந்திரனே அல்லி பூவை கையினில் கொண்டு என்றும் இனிமையான தோற்றம் கொண்டவர். வாழ்விற்கு தேவையான பதினாறு செல்வங்களை தரவல்லவர்.
நீதித் துறையில் உயர் பதவிகளையும் வம்பு வழக்குகளில் நியாயமான வெற்றியும் தரவல்லவர்.

நம் உடலை விட்டு ஆன்மா பிரிந்த பிறகு இக்கூற்றுக்கு ஏற்கனவே ஒரு ஆன்மா குடியிருந்த காரணத்தினால் உத்திர பூமியில் பூதவுடல் சிதையில் ஏற்படும் முன் உடலுக்கு அவ்உடலுக்கு தனது தேவி சாமுண்டா வுடன் அங்கு வந்து அந்தப் பிரேத உடலுக்கு ஆசி வழங்கக்கூடிய இறைவன் பீஷ்ண பைரவர் ஆவார்.

காயத்ரீ
" ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வா னுக்ரஹாய தீமஹி தந்நோ
பிஷ்ண பைரவ ப்ரசோதயாத் "

ஸ்ரீ சம்ஹார பைரவர்

அஷ்டதிக் பைரவர்களில் ஈசானியம் எனும் வடகிழக்கு பாகத்தின் அதிபர் சம்ஹார பைரவர். இங்கே சம்ஹார பைரவர் எனும் நாமத்துடன் பத்து கரங்களும் பத்துவித ஆயுதங்களும் கொண்டு முன் ஏழு திசை பைரவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தானே ஏந்தியுள்ள திகம்பரர்.

ஞமலி எனும் நாய் வாகனத்துடன் ரௌத்திரம் தோற்றமும் மின்னல் வண்ண நிற மேனியும் கொண்டவர்.

காசியில் 'திரிலோசன கஞ்ச்' எனுமிடத்தில் கோயில் கொண்டவர், தமிழகத்தில் திருவெண்காடு, ஓசூர் ஆகிய இடங்களில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.
சர்வ தோஷங்களையும் போக்க வல்லவர் புத்தி முக்தி பலம் தருபவராகவும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் இவர் அஷ்டமி எனும் திதிக்கு உரியவராக விளங்குகிறார்.

அனைத்து தடங்கல்களையும் போக்கும் இவர் உடலில் நாகராஜனை பூணூலாக அணிந்துள்ளார். உடலைவிட்டு ஆன்மா முக்தி அடையும் தருவாயில் அமைதியான ஆனந்தத்தை தரவல்லவர்.

காயத்ரீ
" ஓம் மங்களேஸாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி தந்நோ
சம்ஹார பைரவ ப்ரசோதயாத் "

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.