Breaking News :

Tuesday, June 25
.

சுயம்புவாக தோன்றிய யோக நரசிம்மர்!


திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள ஊர் ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர்.

திங்கள் ஸ்ரீநரசிம்ம தரிசனம்.செய்வோம் யோக நரசிம்மர் காயத்திரி மந்திரம் சொல்வோம் .நலன்கள் பெறுவோம் !..ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்.

நரசிம்மர் காயத்ரி :
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
 தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

பொருள் :
வஜ்ரநாகனை நாம் அறிந்து கொள்வோம். அருளை வழங்கும் அந்த இறைவனின் மீது நாம் தியானம் செய்வோம். நரசிம்மனாகிய அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும். பதவிகள் வந்து சேரும். முக்தியை அடையலாம்.

திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள ஊர் ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர். முன்னூற்று என்ற பெயரே நாளடைவில் முன்னூர் என்று மருவியதாம்.

இங்கே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅருளாளப் பெருமாள். முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட நல்லியக்கோடன் எனும் மன்னனின் வேண்டுதலுக்கு இரங்கி, அவனது ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களையும் பொருட்டு அவனுக்கு நேரடியாக அருளியவர் என்பதால் இப்படியரு திருப்பெயராம்.

மேற்கு நோக்கி அருளும் ஸ்வாமியை, அரவத்தை அணிகலனாகக் கொண்ட கருடாழ்வார் வணங்குவது போன்ற அமைப்பு, இந்தத் தலத்தின் சிறப்பு.
இங்கே தனிச்சந்நிதியில் யோக பீடத்தில் சுயம்புவாக அருள்புரியும் ஸ்ரீயோக நரசிம்மரும் சிறந்த வரப்ரசாதி. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கோயில் திருப்பணிகள் நடந்த வேளையில், பூமியில் இருந்து வெளிப்பட்டவர் இந்த யோக நரசிம்மர். அன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் என்பதாலும், பிரதோஷ வேளையில் திருவிக்கிரகத் திருமேனி கிடைத்ததாலும் 'இந்த யோக நரசிம்மர் மிகவும் சாந்நித்தியமானவர்’ என்று சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.
தொடர்ந்து ஏழு வியாழக்கிழமைகள்- ராகு காலத்தில் நெல்லிக்காய் எண்ணெய் தீபமேற்றி இவரை வழிபட, நல்ல வேலை கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும்.

பிரதோஷ தினத்தில், மாலையில் நீராடி உடல்- உள்ளத் தூய்மை யுடன் ஸ்ரீநரசிம்மரை வழிபட, இல்லற வாழ்வில் இடர்ப்பாடுகள் நீங்கும்; புத்திரபாக்கியம், தனபாக்கியம் வாய்க்கும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

இங்கே தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீவைஷ்ணவிதேவியை வழிபட, காரியத் தடைகள் நீங்கும் என்கிறார்கள். இந்த அம்பிகை சங்கு மற்றும் கதாயுதத்துடன் காட்சி தருகிறாள். இது, வேறெங்கும் காண்பதற்கரிய விசேஷம் என்கின்றனர்
முன்னூர் ஸ்ரீஅருளாளப் பெருமாள் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரைக் கண்ணாரத் தரிசியுங்கள்; உங்கள் கவலைகள் யாவும் தீரும்!..ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.