Breaking News :

Monday, December 02
.

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை


சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர் ! 

 

இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை 

 

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்.

 

இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்.

 

இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..

 

அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..

 

பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு.. வரலாறு சரியாக தெரியவில்லை..

 

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. பின்புற முகத்தை காண முடியாது 

 

அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..

 

இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு.

 

மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் 

ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.

 

இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம்.

 

சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்.

 

இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்.

 

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.

பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.